கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: கடுப்பில் சித்தார்த் போட்ட பளீர் பதில்
சித்தார்த் இறந்துவிட்டதாக கூறி சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
நடிகர் சித்தார்த் பின்னணிப் பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். தமிழ்நாடு, சென்னையில் பிறந்த இவர் தனது இளமைக்கால பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார். தனது முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.
திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சித்தார்த் (Siddharth), சமூக வலைத்தள (Social Media) பக்கத்தில் அரசியல் ரீதியாக பல கருத்துக்களை கூறி வருகிறார். இவரது கருத்துகளுக்கு பலர் சாதமாகவும் ஒரு சிலர் பாதகமாகவும் சப்போர்ட் செய்து வருகின்றனர். பாதகமாக அவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைப்பவர்கள் ஏராளம். இந்நிலையில் தற்போது சித்தார்த் இறந்துவிட்டதாக வைரலான புகைப்படம் ஒன்றை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ALSO READ | திரைத்துறையைச் சார்ந்த 12000 குடும்பங்களுக்கு உதவிய நவரசா!
அத்துடன் குறிப்பிட்டவர்களின் வெறுப்பு மற்றும் தொல்லை. இதில் நாம் எதற்கு குறைக்கப்பட்டுள்ளோம் என அவர் பதிவிட்டுள்ளார்.
சிலரோ இது தவறுதலாக நடத்திருக்கும் என தெரிவித்து வருகின்றனர். அதாவது பிக்பாஸ் 13 வெற்றியாளர் சித்தார்த் சுக்லா, தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். 40 வயதே ஆகும் இவர் நேற்று காலை மாரடைப்பால் மும்பையில் காலமானார். அவருக்கு பதிலாக நடிகர் சித்தார்த்தின் படத்தை வைத்திருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ALSO READ | மக்களே...! இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க ஓர் அறிய வாய்ப்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR