மக்களே...! இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க ஓர் அறிய வாய்ப்பு!

இந்தியன்-2 படத்தில் நடிக்க விருப்பமுள்ள நடிகர் நடிகைகள் தேவை என லைக்கா நிறுவனம் விளம்பரம்!

Updated: Jul 27, 2019, 03:00 PM IST
மக்களே...! இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க ஓர் அறிய வாய்ப்பு!

இந்தியன்-2 படத்தில் நடிக்க விருப்பமுள்ள நடிகர் நடிகைகள் தேவை என லைக்கா நிறுவனம் விளம்பரம்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் இந்தியன்-2. இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.

இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் இணைந்து உள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தை அடைந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்க அனுபவமுள்ள நடிகர் நடிகைகள் தேவை என்றும் விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

புதுமுக நடிகர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அனைவரையும் ஈர்த்துள்ளது. அதில் எவ்வித வயது வரம்புமின்றி துணை கதாபாத்திரங்களில் நடிக்க ‘ஆர்வமுள்ள, நடிப்பில் தேர்ந்த’ நடிகர், நடிகையர்கள் தங்களது சுய விவரங்களை casting.indian2@gmail.com, இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கமல்ஹாசன், நடிப்பில் 1996 ஆம் ஆண்டில் திரைக்கு வந்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன் ஆகும்.  இந்தப்படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு பிறகு  இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் படத்தின் இயக்குனர் சங்கர். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகள் பட்டியல் முழுமையடைந்து விடும் எனத் தெரிகிறது.