பச்சைப் பசேலென இருக்கும் மலைப் பிரதேசத்தில், வானுயரத்தில் இருந்து வீழும் நீர் வீழ்ச்சியை கண்டு ரசிக்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான அந்த அழைக் காண்பதற்காகவே பல மைல், கிலோ மீட்டர் தூரங்கள் பயணிப்பவர்கள் ஏராளம். தமிழ்நாடு மற்றும் இந்தியா மட்டுமில்லை உலகம் முழுவதுமே பேரழகைக் கொண்டிருக்கும் நீர் வீழ்ச்சிகள் அதிகம். அப்படியான பேரழகைக் கொண்டிருக்கும் நீர் வீழ்ச்சியின் வீடியோ டிவிட்டரில் வைரலாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பாம்புக்கு பால் வைக்கலாம்! தண்ணி வச்சா என்ன ஆகும்? வீடியோ வைரலாகும்?


முதலில் அந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் தோன்றும் ஒரே எண்ணம், நீரா? இல்லை வெள்ளியா? என்பது தான். அந்தளவுக்கு பளிச்சென்றுக்கு இருக்கும் நீர் தொலைவில் இருந்து பார்க்கும்போது சாலைகளின் மீது ஊற்றுவது போல் உள்ளது. ஆனால், அருகாமையில் செல்லும்போது, மலையின் உச்சியில் இருந்து சாலைக்கு அருகாமையில் வீழ்ந்து, பாய்ந்தோடுகிறது நீர்வீழ்ச்சி.



இந்தியாவில் இருந்து வீடியோவைப் பார்ப்பவர்கள், இந்த நீர்வீழ்ச்சி இமயமலையில் இருக்கும் ஒன்றோ என எண்ணத் தோன்றும். ஆனால், இந்த நீர்வீழ்ச்சி இந்தியாவில் இல்லை. நார்வே நாட்டில் இருக்கும் நீர்வீழ்ச்சி. பனிமலையில் இருந்து வழிந்தோடி வரும் நீர், வானாவிய உயரத்தில் இருந்து பாயந்து கொட்டுகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும், இயற்கையின் அதிசயம், கண்களுக்கு விருந்து என கமெண்ட் அடித்து வருகின்றனர். இன்னும் சிலர், நேரடியாக ஒருமுறையாவது இந்த அழகை கண்டு ரசித்துவிட வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தையும் பதிவு செய்துள்ளனர். 


மேலும் படிக்க | உடும்பை கடித்து குதறிய 10 அடி நீள கோப்ரா பாம்பு...வீடியோ வைரல் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR