உறங்கும் தாத்தாவின் சட்டைக்குள் புகுந்த பச்சை பாம்பு Video!
கடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் ஒரு வீடியோ தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில் முதியவர் ஒருவர் அசதியில் உறங்க அவரது சட்டைக்குள் பாம்பு ஒன்று புகுந்துவிடுகிறது.

தாத்தாவின் சட்டைக்குள் புகுந்த பாம்பினை இளைஞர் ஒருவர் பிடித்து வெளியே எடுக்கின்றார்.
பொதுவாக, இந்த சூழ்நிலையில் எவரும் தூக்கத்தில் இருந்து வெளியே வந்துவிடுவர், ஆனால் இவரோ தனது தூக்கத்தை விட்டுக்கொடுக்காமல், பாம்பை வெளியே எடுக்கும் வரையிலும் முழுவதுமாக ஆழ்ந்த தூக்கத்திலேயே உள்ளார்.
மகாராஷ்டிராவின் அகமதுநகரில் உள்ள மருத்துவமனையில் நிகழ்ந்த இச்சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இச்சம்பவத்தில் உறங்கி கிடக்கும் முதியவரின் சட்டைக்குள் பாம்பு ஒன்று புகுந்ததும் இதனை பார்த்த அருகிலிருந்து மக்கள், மருத்துவர்களை எச்சரித்தனர். இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அகமதுநகரில் உள்ள வனவிலங்கு மீட்பு சங்கத்தை எச்சரித்து அவர்களின் உதவியை நாடியது.
பின்னர் அங்கு வந்த வனவிலங்கு மீட்பு அதிகாரிகள் பாம்மை மீட்டு பத்திரமாக காட்டில் எடுத்து சென்று விட்டனர்.
இச்சம்பவித்தின் முழு வீடியோவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.