சுட்டிக் குழந்தையின் பாம்பு விளையாட்டு! பார்த்தாலே பகீர் என பயப்படுத்தும் வீடியோ
Trending Snake and Child Video: குழந்தைக்கு பாவம், பாம்பென்று தெரியுமா இல்லை பழுதென்று தெரியுமா? பொம்மையாய் நினைத்து பாம்பை சீண்டும் சுட்டிக் குழந்தை
குழந்தை-பாம்பு வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் நாம் பல வித வீடியோக்களை பார்த்து ரசிக்கிறோம். விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அனைவராலும் அதிகமாக ரசிக்கப்படுபவை. பதிவிடப்பட்ட உடனேயே வைரல் ஆகும் வீடியோக்கள் பார்க்கப் பார்க்க மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கின்றன. அதுவும் பாம்புகளின் வீடியோக்கள் துரிதமாக வைரல் ஆகின்றன. பாம்புகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது. பாம்புகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதால் தொடர்ந்து விதவிதமான பாம்பு வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. உலகில் லட்சக்கணக்கான பாம்புகள் இருந்தாலும், அவற்ரில் சில மிகவும் நச்சுத்தன்மை கொண்டவை. பாம்பு என்ற வார்த்தையைக் கேட்டாலே முதலில் வெலவெலத்துப் போகும்.
பாம்பை நினைத்தாலே முதலில் வரும் வார்த்தை பயம் தான்! பொதுவாக பாம்புகளை கண்டால் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அங்கிருந்து ஓடி விடுவார்கள். ஆனால், நமக்கு அச்சத்தை கொடுக்கும் பாம்புகளை அருகாமையில் பார்க்க சமூக வலைத்தள வீடியோக்கள் உதவுகின்றன. பாம்புகள் தொடர்பான பல வித வித்தியாசமான விஷயங்களையும், உண்மைகளையும் நாம் இந்த வீடியோக்களில் பார்க்கிறோம்.
மேலும் படிக்க | 12 அடி நீள பாம்புடன் விளையாடும் துணிச்சல் பெண்: வீடியோ வைரல்
குட்டியான பாம்பாக இருந்தாலும் சரி, மலைப்பாம்போ அல்லது ராஜநாகமோ, தண்ணீர் பாம்போ அல்லது கட்டுவிரியனோ, நாகப்பாம்போ அல்லது அனகோண்டாவோ சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, அவை அச்சத்தை ஏற்படுத்துகின்றன. பாம்பென்றால் பத்தும் பறந்து போய்விடும் என்பது உண்மை தானே?
மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் குழந்தை ஒன்று, மிகப் பெரிய பாம்புடன் விளையாடுகிறது. குழந்தை, சாவகாசமாக பாம்புடன் விளையாடுவது, குழந்தைக்கு அது ஒரு விளையாட்டுப் பொருளாகவே இருக்கிறது என்பதை உணர்த்துவதாக இருக்கிறது. ஆனால், அந்த குட்டிக் குழந்தை செய்யும் செயல்களைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
மேலும் அந்த குழந்தை, பாம்புக்கு நடுவில் ஒய்யாரமாக படுத்திருப்பதைப் பார்த்தால், சோபாவில் அமர்ந்திருப்பதுபோல மிகவும் வசதியாக இருப்பதைப் போல தோன்றுகிறது. சோபாவில் இருந்து எழும்போது, கைகளை அசைப்பது அழுத்தி எழுந்திருப்பதுபோலவே, குழந்ஹ்டை தனது கைகளை பாம்பின் மீது அழுத்தி எழுந்து நடக்கிறது.
அச்சம் தரும் வீடியோ இது...
இந்த வீடியோ இதுவரை பல்வேறு சமூக ஊடக தளங்களில் மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. சில நொடிகளே உள்ள இந்த வைரல் வீடியோவில், குழந்தை, மிகவும் சாவகாசமாக, அச்சம் என்பது மடமையடா என்ரு சொல்வதுபோல நிதானமாக விளையாடுவதை பார்க்க முடிகிறது.
வைரலாகி வரும் இந்த வீடியோவை ஸ்நேக் வோர்ல்ட் என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியிட்டுள்ளது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் லட்சக்கணக்கான லைக்ஸ் பார்வைகளைப் பெற்றுள்ளது. அத்துடன் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ