வைரல் வீடியோ: இணையத்தில் பகிரப்படும் விலங்குகளின் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக நாம் காண முடியாத, காண்பதற்கு மிக அரிதான பல விஷயங்களை நாம் இந்த வீடியோக்களில் காண்கிறோம். இணையத்தில் ஒவ்வொரு நாளும் புதிய வீடியோக்கள் வெளியிடப்பட்டு வைரலாகி வருகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களே பெரும்பாலும் அதிகமாக இருக்கின்றன. அதுவும் பாம்புகளின் வீடியோக்கள் எப்போதும் பரவலாக பார்க்கப்பட்டு பகிரப்படுகின்றன. சில நேரங்களில் இந்த வீடியோக்களை பார்ப்பது வேடிக்கையாகவும், சில சமயங்களில் மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக வலைதளங்களின் வியக்க வைக்கும் உலகில், எப்போது எது கண் முன் வரும் என்று சொல்வது கடினம். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. தற்போது பாம்பு மற்றும் பூனை தொடர்பான ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இதில், தனக்கு எதிரில் நிற்கும் பூனையை பாம்பு முத்தமிட முயல்கிறது. ஆனால் அதற்கு பின் வீடியோவில் காணப்படும் காட்சி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. 


மேலும் படிக்க | தாய் மசாஜ்லாம் வேஸ்டு.. நாய்க்கு பூனை செய்யும் மசாஜ் தான் பெஸ்டு.. வைரல் வீடியோ! 


பூனைக்கு முத்தமிட்ட பாம்பு 


சில வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், ஆபத்தான பாம்பு ஒன்று அருகில் வந்தும் பூனை ஒன்று அசால்டாக அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. பாம்புக்கு பூனையை மிகவும் பிடித்து விடுகிறது. தன் உடம்பில் பாதியை காற்றில் உயர்த்தி முத்தமிட வேண்டும் என்பது போல் பூனையை நோக்கி பாம்பு நகர ஆரம்பித்தது. மிக அமைதியாக பூனை பாம்பை பார்க்கிறது. 


இதன் பிறகு பூனை செய்யும் செயல் வீடியோ காண்பவர்கள் அனைவரையும் வியக்க வைக்கிறது. பாம்பு ஒன்று மிக அருகில் இருந்தும், பூனை அதை பற்றி கவலைப்படாமல் இவ்வளவு அசால்டாக இருப்பது வியப்பை அளிக்கின்றது. 


பூனைக்கு கிஸ் கொடுக்கும் பாம்பின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:



பாம்பு பூனைக்கு முத்தம் கொடுக்க வந்ததா அல்லது பூனையை கொத்த வந்ததா என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால், பூனை முதலில் தைரியமாக இருந்தாலும், பின்னர், ஆபத்தை உணர்ந்து அதை தட்டி விட்டு தனது பாதத்தால் அழுத்துகிறது. பூனை மற்றும் பாம்பின் இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது, மேலும் ஏராளமானோர் இதை லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் meowcat_happypet என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இணையவாசிகள் இதற்கு பலதரப்பட்ட கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.


மேலும் படிக்க | Viral Video: பறந்து சென்று பறவையை வேட்டையாடிய மீன் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ