திருச்சிற்றம்பலம் பாடலுக்கு டான்ஸ் ஆடிய அஜித் பட நடிகை: வீடியோ வைரல்

நடிகை கனிகா தனது 12 வயது மகனுடன் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 28, 2022, 05:56 PM IST
  • திருச்சிற்றம்பலம் பாடலுக்கு செம டான்ஸ்
  • அஜித் பட நடிகையின் வீடியோ வைரல்
திருச்சிற்றம்பலம் பாடலுக்கு டான்ஸ் ஆடிய அஜித் பட நடிகை: வீடியோ வைரல் title=

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது திருச்சிற்றம்பலம். தனுஷ், நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. ராக்ஸ்டார் அனிருத் இசையில் தனுஷ் எழுதிய திருச்சிற்றம்பலம் படத்தின் பாடல்கள் அனைத்தும் வைரல் ஹிட் அடித்துள்ளன. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரசன்ன GK படத்தொகுப்பு செய்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தற்போது ரூ 50 கோடியை தாண்டி வசூல் செய்து இரண்டாவது வாரமாக வெற்றிநடை போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இந்த படத்தில் இடம் பெற்ற ’மேகம் கருக்காதோ’ என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடலில் தனுஷ், நித்யா மேனன் ஆகியோர்களின் அழகான டான்ஸ் ரசிகர்களை ரசிக்க வைத்தது என்றும் தெரிந்தது. இந்த பாடல் மிகப் பெரிய அளவில் ஹிட்டானதை அடுத்து ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை அனைவரும் இதன் ரீல்ஸ் வீடியோவை செய்து ஷேர் செய்து வருகின்றனர். 

மேலும் படிக்க | கோப்ரா - கடைசி நேரத்தில் கிடைத்த சர்ட்டிஃபிக்கேட்... படக்குழு நிம்மதி

இந்த நிலையில் தற்போது நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது 12 வயது மகனுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதோ என்ற பாடலுக்கு செம டான்ஸ் ஆடியுள்ளார். இந்த பதிவில் அவர் என கேப்ஷனாக., 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kaniha (@kaniha_official)

அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டும்..
ஒருபோதும் பின்வாங்க வேண்டாம்!
என் மகனுடன் மகிழ்ச்சி மற்றும் உற்சாகம்
அன்பு அழகானது!

என்று தெரிவித்துள்ளார்.

நடிகை கனிகா அஜித் நடித்த வரலாறு, சேரன் நடித்த ஆட்டோகிராப் உள்ளிட்ட ஒருசில தமிழ் திரைப்படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது எதிர்நீச்சல் என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ராஜா ராணி 2 சீரியலிலிருந்து அர்ச்சனா விலகியது ஏன்? இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News