வைரல் வீடியோ: நவீன தொழில்நுட்ப வசதிகள் நமது பொழுதுபோக்கு அம்சங்களை அதிகரித்துவிட்டன. அதில் இணையத்தின் பயன்பாடும், கையில் உள்ள கைப்பேசியும் நம்மை எப்போதும் மகிழ்விக்கும் வேலையைச் செய்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருவருக்கு பிடித்த ஒரு விஷயத்தை உடனடியாக தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்தால், அது பிடித்துப் போன பலரும் பகிர்ந்து லைக் செய்வதால், பல செய்திகள் வைரலாக பரவுகின்றன.


அதிலும் நாம் நேரில் பார்க்காத, பார்க்கவே முடியாத அல்லது ஆபத்தான விஷயங்கள் எப்போதும் ஆச்சரியம் கொடுக்கின்றன. அதேபோல, இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள் அனைத்துமே வித்தியாசமவைகளாக இருக்கின்றன.


மேலும் படிக்க | கடலில் கலர்ஃபுல்லாக நீந்தி விளையாடும் பாம்பு: இது பாம்பா இல்லை பழுதா


அவற்றில்  பல விஷயங்கள் தினசரி வாழ்வில் நாம் பார்க்காதவைகளாக இருக்கும்போது, அவை வைரலாகின்றன. சில சமயங்களில் அந்த வீடியோக்கள், பரவசமூட்டுகின்றன.


சில சமயம் சிரிக்க வைக்கும் வீடியோக்கள், வேறுசில சமயம் சிந்திக்கவும் வைக்கின்றன. ஒரு சமயத்தில் ஆச்சரியப்பட வைத்தால், மற்றொரு சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வீடியோக்கள், சில சமயம் சோகத்தையும் ஏற்படுத்துகின்றன. 


சமூக ஊடகங்களில் தற்போது பிரபலமாக வைரலாகும் ஒரு வீடியோவில், பாம்புகள் காதல் செய்யும் வீடியோ பட்டையை கிளப்பி வருகிறது. அந்த சுவாரசியமான வீடியோ Snake World என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்டு, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


மேலும் படிக்க | பசுவின் கன்றுக்கு பால் கொடுக்கும் நாய்; மனம் நெகிழ வைக்கும் வீடியோ 


தற்போது வெளியாகியுள்ள வீடியோ-வில் இரண்டு பாம்புகளின் சல்லாபம் மிகவும் தெளிவாகத் தெரிகிறது.  பளிச்சென்ற நிறத்தில் அங்கும் இங்கும் அலைந்து மோதி, பின்னிப் பிணைந்து காதல் செய்யும் பாம்புகளை பார்ப்பதே கடினம்.


அதிலும் பாம்புகளின் காதல் வீடியோ மிகவும் தெளிவாக இருப்பதால், வீடியோவை இடைஞ்சல் இன்று பார்க்க முடிகிறது. இதைப் பார்த்து ப்ல்லாயிரக்கணக்கான நெட்டிசன்கள் லைக் செய்துள்ளனர்.


பல அடி நீளமுள்ள நாகங்களின் கண்கொள்ள சல்லாப காதலைப் பார்க்கும்போது, இரண்டிற்கும் இடையில் நூலிழை கூட இடைவெளி இல்லை என்று தோன்றுகிறது. இந்த பாம்பின் வீடியோவை பார்த்தால் காதலின் ராஜா என்ற பட்டத்தை பாம்புக்கே கொடுக்கலாம் என்று தோன்றும்.


 



 


பாம்புகளின் காதலை, வீடியோவைத் தவிர, இவ்வளவு க்ளோசப்பில் பார்க்க முடியுமா? பாம்புகளின் காதலை நேரில் பார்த்தால் நமக்கு சங்குதான் என்றும் சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.


காதலா இல்லை சாதலா என்றால் சாதல் என்று சொல்வது நம்முடைய காதலுக்காக இருக்கலாம், ஆனால் வேறு ஒருவரின் காதல் களியாட்டத்தைப் பார்ப்பதற்காக இருக்கக்கூடாது தானே?


எனவே, பாம்பின் காதலையும், காமக் களியாட்டத்தையும் வீடியோவில் பார்த்து ரசித்து கருத்திட்டு, இந்த வீடியோவை இணையவாசிகள் வைரலாக்கிவிட்ட்டனர்.


மேலும் படிக்க | கம்பீரமாக நடக்கும் யானையை வியந்து பார்க்கும் மக்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR