வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பூனைகள் மிகவும் எளிமையான மற்றும் அழகான விலங்குகளாகும். பூனைகளை பலர் தங்கள் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதுண்டு. பூனைகளுடன் மனிதர்களும் பிற விலங்குகளும் விளையாடுவதை நாம் அடிக்கடி பார்த்துள்ளோம். இது தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 


ஆனால், பாம்பு பூனையுடன் விளையாடி நீங்கள் பார்த்துள்ளீர்களா? இல்லையென்றால், அப்படி ஒரு வீடியோவை இந்த பதிவில் காணலாம். தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு பூனையுடன் பாம்பு ஒன்று அழகாக விளையாடுகிறது. ஆனால், பூனை கண் விழித்தவுடன் அங்கு சலசலப்பு ஏற்படுகின்றது.


மேலும் படிக்க | இந்த கலர்ல மலைப்பாம்பா? சிறுமியிடம்....பதற வைக்கும் வீடியோ வைரல் 


வைரலான  வீடியோ-வில், ஒரு பூனை அமைதியாக தூங்குவதை காண முடிகின்றது. திடீரென்று அங்கு ஒரு பாம்பு வந்து பூனை மீது ஊர்ந்து செல்லத் தொடங்குகிறது. பாம்பு தன் மீது படுத்திருப்பதை உணராத பூனை உறக்கத்திலேயே இருக்கிறது. ஆனால் பூனையின் கண்கள் திறந்தவுடன், பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்து காற்றில் குதிக்கிறது.


பூனை மற்றும் பாம்பின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்: 



இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் One earth one life என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. பாம்பு பூனைக்கு எந்த எந்த தீங்கையும் விளைவிக்கவில்லை, பூனையும் பாம்புக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பாம்பை பார்த்து பூனை குதிப்பதை பார்த்தால், நம்மாலும் நம் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியாது. 


இந்த வீடியோ வைரலாக பரவி வருகின்றது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | ‘சீக்கிரம் வாடா...தூக்கிட்டு ஓடிடலாம்’: சிப்ஸ் பாக்கெட் திருடும் நாயும் குரங்கும், வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ