வைரல் வீடியோ: இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக வலைத்தளங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. பாம்புகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் பல விஷயங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. நம்மால் கற்பனை செய்ய முடியாத அனைத்து விஷயங்களையும், பொதுவாக நாம் காண முடியாத அரிய விஷயங்களையும் நாம் இங்கே காண்கிறோம். தற்போதும் காண்பதற்கு மிக அரிதான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகினது.


இது பாம்புகளின் காதல் வீடியோ!! பாம்புகள் காதல் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் இதை லைக் செய்துள்ளனர். 


மேலும் படிக்க | ‘இவ்ளோ பெருசா இருந்தா எப்படி?’: மணமகளுக்கு வந்த சோதனை, வைரல் வீடியோ


பாம்புகளின் காதல்:


தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் காணப்படும் இடம் ஒரு பண்ணை போல் தெரிகிறது. சுமார் பத்து அடி நீளமுள்ள இரு பாம்புகள் ஒன்றோடொன்று மிக நெருக்கமாக இருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. இரண்டும் ஒன்றின் உடலால் மற்றொன்றை போர்த்தியுள்ளது போல காணப்படுகின்றது. தலையை ஒன்றோடொன்று இடித்துக்கொண்டும், வளைந்து நெளிந்து ஒன்றை ஒன்று பற்றிக்கொண்டும் பாம்புகள் செய்யும் காதல் பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது. 


பாம்புகள் சண்டை இடும் பல வீடியோக்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால், காதல் பொங்க பாம்புகள் கட்டித் தழுவும் இந்த வீடியோ காண்பதற்கு வித்தியாசமாய் உள்ளது. பாம்புகளுக்கு இடையிலான காதல் வீடியோவில் தெள்ளத் தெளிவாகத் தரிகின்றது.


பாம்புகள் காதல் செய்யும் வீடியோவை இங்கே காணலாம்: