‘இவ்ளோ பெருசா இருந்தா எப்படி?’: மணமகளுக்கு வந்த சோதனை, வைரல் வீடியோ

Funny Viral Video: இது என்னடா புது சோதனை? மணமக்களுக்கு வந்த ஒரு வினோத சோதனையின் வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 27, 2022, 12:56 PM IST
  • சமூக ஊடகங்களில் வைரலாகும் பல வீடியோக்களை நாம் தினமும் கண்டு ரசிக்கிறோம்.
  • மனித வாழ்க்கையின் பல அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் இவை இருக்கின்றன.
  • பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
‘இவ்ளோ பெருசா இருந்தா எப்படி?’: மணமகளுக்கு வந்த சோதனை, வைரல் வீடியோ title=

சமூக ஊடகங்களில் வைரலாகும் பல வீடியோக்களை நாம் தினமும் கண்டு ரசிக்கிறோம். மனித வாழ்க்கையின் பல அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் இவை இருக்கின்றன. பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் ஒவ்வொரு நாளும் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம். பல திருமணங்களில், மணமக்களும், அவர்களது உறவினர்களும், விருந்தினர்களும் எப்போதும் மறக்க முடியாத வகையில் சில நிகழ்வுகளும் நடக்கின்றன. 

இந்த நிகழ்வுகளில் சில வேடிக்கையாகவும், சில பரிதாபமாகவும் இருப்பதுண்டு. இப்படிபட்ட வினோத வீடியோக்களை மக்கள் இணையத்தில் வெளியிடுவதுண்டு. கேளிக்கைகள் மிகுதியாக இருப்பதால், திருமணம் தொடர்பான வீடியோக்களை மக்கள் விரும்பி பார்க்கின்றனர். தற்போது மீண்டும் திருமணம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. மணமகனின் உயரம் மணமகளின் உயரத்தை விட மிக அதிகமாக இருந்ததை வீடியோவில் காண முடிகின்றது. இது மணமகளுக்கு பிரச்சனையை உண்டு செய்கிறது. மாலை மாற்றும் சடங்கின் போது மணமகளால் மாலை மாற்றகூட முடியவில்லை. அவர் மிகவும் சிரமப்படுகிறார். 

மேலும் படிக்க | ஆசையாய் வந்த கணவன், வெச்சி செஞ்ச மனைவி: வைரல் வீடியோ 

மணமகளுக்கு வந்த இந்த வினோத பிரச்சனை அங்கு இருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அங்கு இருந்த சூழலே மாறிப்போனது. ‘இது என்ன புது பிரச்சனை?’ என அனைவரும் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். 

மணமகளுக்கு வந்த வினோத சோதனை

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், மணமகன் ஊர்வலத்துடன் திருமண மண்டபத்தை அடைந்ததைக் காண முடிகின்றது. சிறிது நேரம் கழித்து மணமகள் உள்ளே நுழைந்ததும் மாலை மாற்றும் சடங்கு தொடங்குகிறது. ஆனால், அப்போதுதான் ஒரு பெரிய சவால் எழுகிறது. மணமகன் மணமகளை விட மிக உயரமாக இருந்ததால், மணமகளால் அவருக்கு எளிதாக மாலை அணிவிக்க முடியவில்லை. மணமகள் துள்ளிக் குதித்து மாலை அணிவிக்க முயல்கிறார். இந்த முயற்சியில் அவர் கடுப்பாவதும் தெரிகிறது. 

துள்ளி குதித்து மாலை போட்ட மணமகளின் வீடியோவை இங்கே காணலாம்:

ஒரு வழியாக மாலை போட்ட மணமகள் 

பல முறை முயன்ற பின்னர் மணமகள் இறுதியாக மணமகனின் கழுத்தில் மாலையைப் போடுவது வீடியோவின் முடிவில் தெரிகிறது. மாலை மாற்றும் சடங்கு முடிந்தவுடன் அனைவரும் கை தட்டுகிறார்கள். இந்த திருமண வீடியோ ravikany87 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு பல வியூஸ்களும் லைக்குகளும் வந்த வண்ணம் உள்ளன. இப்படி கூட பிரச்சனை வருமா என இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க | Viral Video: சின்ன விசியத்துக்காக கட்டுன புருஷனை இப்படி அடிப்பது.. பாவம் 15 தையல்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News