வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி இது பாம்பின் காதல் வீடியோவாகும். பொதுவாக காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்குச் சொந்தமானது தான் என்பதை இந்த வீடியோ உங்களுக்கு உணர்த்தும். இதில் ஆரஞ்சு நிற இரண்டு நாகப்பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், இரண்டு பாம்புகள் மிக அழகாக பின்னிப் பிணைவதைக் காணலாம்.


மேலும் படிக்க | நாய்க்கு மசாஜ் செய்யும் பூனை! வைரல் வீடியோ! 


பாம்புகள் காதல் செய்யும் இந்த வீடியோ சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் இதை லைக் செய்துள்ளனர்.


வீடியோவை இங்கே காணக்: 



இரு பாம்புகளுக்கும் இடையிலான காதல் இந்த வீடியோவில் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. சில நேரங்களில் தலையோடு தலையை இணைத்தும், உடலோடு உடலை இணைத்தும் இவை காதல் செய்கின்றன. வீடியோவில் இந்த காட்சி காண்பதற்கு மிக அழகாக தெரிகின்றது. 


பாம்புகளின் காதல் பற்றிய இந்த வீடியோ சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் ஆர்வத்துடன் பார்க்கப்பட்டு வருகிறது. இது @pd.reptiles  பெயரில் இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | Viral Video: தத்தளிக்கும் பூனைக் குட்டி; காப்பாற்றிய நாய்... மனதை உருக்கும் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ