Viral Video: தத்தளிக்கும் பூனைக் குட்டி; காப்பாற்றிய நாய்... மனதை உருக்கும் வீடியோ!

சமூக ஊடகத்தில் பகிரப்படும் சில வேடிக்கையான, அரிய தருணங்களை காட்டும் வீடியோக்கள் நம் மனதை மிகவும் லேசாக்கி விடும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 14, 2022, 05:40 PM IST
  • பூனைகளுக்கும் நாய்களுக்கும் இடையிலான நட்பை வெளிப்படுத்தும் தருணங்கள்.
  • நாய் ஒன்று பூனை குட்டியை சாதுர்யமாக காப்பாற்றும் வீடியோ.
  • சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ.
Viral Video: தத்தளிக்கும் பூனைக் குட்டி; காப்பாற்றிய நாய்... மனதை உருக்கும் வீடியோ! title=

சமூக ஊடகத்தில் பகிரப்படும் சில வேடிக்கையான, அரிய தருணங்களை காட்டும் வீடியோக்கள் நம் மனதை மிகவும் லேசாக்கி விடும். இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள், சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன.  பூனைகளுக்கும் நாய்களுக்கும் இடையிலான நட்பை வெளிப்படுத்தும் தருணங்கள் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். இப்படி ஒரு காணொளியை பார்க்கும் போது மன அழுத்தம் விலகி, மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றால் மிகையில்லை. தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வரும் வீடியோவில் நாய் ஒன்று பூனை குட்டியை சாதுர்யமாக காப்பாற்றும் வீடியோ  மிகவும் வைரலாகி வருகிறது.

தண்ணீருக்குள் தத்தளித்த பூனைக் குட்டியை, நாய் ஒன்று மிக சாதுர்யமாக காபாற்றியுள்ளது. வீடியோவில் பூனை குட்டி, தண்ணீருக்குள் நனைந்த படி தவிப்பதைக் காணலாம். அதனை பார்த்த நாய் ஒன்று, என்கிருந்தோ, மரக்கட்டை ஒன்றை கொண்டு வந்து, அதனை பாலம் போல் அமைத்து, பூனையை காப்பாற்றுகிறது. பூனை குட்டியும், மரக்கட்டை மீது நடந்து கரையை அடைகிறது. 

மேலும் படிக்க | Viral Video : திருநெல்வேலிக்கே அல்வாவா... கிரைம் நிருபரின் Earpod-ஐ ஆட்டை போட்ட கில்லாடி கிளி!

சமூக வலைதளத்தில் வைரலாகும் நாய்  - பூனைக் குட்டி வீடியோவைக் கீழே காணலாம்:

இந்த இரண்டு விலங்குகளுக்கும் இடையிலான அற்புதமான பிணைப்பைக் கண்டு பலர் ஆச்சரியப்பட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  நாய்க்கும் பூனைக்கும் இடையிலான பாட பிணைப்பை வெளிப்படுத்தும் அற்புதமான இந்த வீடியோ, பதிவிட்ட முதல் நாளிலேயே  107k லைக்குகளையும் என்ற 15.6k அளவிற்கும் அதிகமான ரீடிவிட்களையும் பெற்றுள்ளது. 

மேலும் படிக்க |  Viral Video: மெட்ரோ ரயில் நிலையத்தில் யோகா பயிற்சி! அசத்தும் CISF நாய்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News