வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்களின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் பல விதமான திருமண சடங்குகளையும், அவற்றில் நடக்கும் வினோதமான விஷயங்களையும் காண முடிகின்றது. இந்த வீடியோக்களில் பெரும்பாலும் நாம் மணமகன் மற்றும் மணமகளுக்கு இடையில் நடக்கும் அன்பான பாச பரிமாற்றங்களை காண முடிகின்றது. இது மட்டுமின்றி, இவர்களுக்கு இடையில் நடக்கும் கியூட் சண்டைகளையும், வேடிக்கைகளையும் கூட பல வீடியோக்களில் நாம் பார்த்துள்ளோம்.


இந்த திருமண வீடியோகக்ளில் சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம். இவை அனைத்தையுமே காட்டும் ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகின்றது. இது காண்பதற்கு மிக கியூட்டாக உள்ளது.


மனதை மயக்கும் திருமண ஜோடி


வீடியோவின் துவக்கத்தில் மணமேடையில் மணமகன் காத்துக்கொண்டு இருப்பதையும், அப்போது மணமகள் மண்டபத்திற்குள் வருவதையும் காண முடிகின்றது. இருவரும் கிட்டத்தட்ட ஒரே கலர் ஷேடுகளில் ஆடைகளை அணிந்துள்ளார்கள். இருவரது ஆடைகளும் மிக அழகாக, மிக நேர்த்தியாக, கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மணமகள் வருவதை பார்த்த மணமகன், மகிழ்ச்சியில் முதலில் ஸ்தம்பித்துப் போகிறார். மணமகளை பார்த்தவுடன் அவர் தன்னையே மறந்துவிட்டார் என்பதை அவர் முகத்தை பார்த்து புரிந்துகொள்ள முடிகின்றது. 


மேலும் படிக்க | மாற்றுத்திறனாளின் வசதிக்காக அருமையான கண்டுபிடிப்பு


மணமகளும் மணமகனை பார்த்தபடியே உள்ளே வருகிறார். அவர் முகத்தில் புன்னகை நிலையாக குடிகொண்டுள்ளது. அவர் மணமகனை நோக்கி வரும்போது அவரது முகம் மகிழ்ச்சியால் பூரிப்படைகின்றது. அவர் மணமகன் அருகில் வந்தவுடன் இருவரும் முத்தங்களை பரிமாறிக்கொள்கிறார்கள். இதை பார்த்து அங்கிருக்கும் அனைத்து விருந்தினர்களும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்கிறார்கள். 


அழகான ஜோடியின் வீடியோவை இங்கே காணலாம்



வீடியோ இணையத்தில் வைரல் ஆனது


இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் sucheetahandthebasics.woman என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்துள்ளார்கள். 


இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஜோடியின் அற்புதமான பாச்தை பாராட்டி வருகின்றனர். ஒரு பயனர், "மிகவும் அழகான அன்பான ஜோடி" என எழுதியுள்ளார். "இந்த மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையில் உள்ள கெமிஸ்ட்ரி மிக அற்புதமாக உள்ளது' என மற்றொரு பயனர் கூறியுள்ளார். "இப்படி ஒரு வாழ்க்கைத் துணை கிடைத்தால், அனைவருக்கும் நல்ல திருமண வாழ்க்கை அமையும்" என்று ஒரு பயனர் கூறியுள்ள நிலையில், "இந்த ஜோடி இணையத்தையே அதிர வைத்துள்ளது' என மற்றொரு பயனர் கூறியுள்ளார்.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | தண்ணிக்குள் இருந்து ட்ரோன் வேட்டையாடும் முதலை வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ