நினைச்சத செய்யாம ஓய மாட்டேன்! இந்த வயசில வைராக்கியம் தேவையா? வைரல் வீடியோ

Cute Boy Video: எனக்கு வேலை தான் முக்கியம், மத்ததெல்லாம் அப்புறம் தான்... கடமை கண்ணியம் கட்டுப்பாடு காக்கும் மாமனிதக் குழந்தை வீடியோ வைரல்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 12, 2023, 02:03 PM IST
  • பேண்ட் அவுந்தா என்ன? வேலை தான் முக்கியம்
  • கடமையே கண்ணாயிருக்கும் சுட்டிப் பையன்
  • ஜாலியாய் பொழுதுபோக்கும் குட்டிப் பையன்
நினைச்சத செய்யாம ஓய மாட்டேன்! இந்த வயசில வைராக்கியம் தேவையா? வைரல் வீடியோ title=

குட்டிச்சுட்டி வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இந்த வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் ஆச்சரியப்படுத்துகின்றன. அதேசமயம், இவை அனைத்தும் உண்மையான வீடியோக்களா அல்லது தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவையா என்ற கேள்விகளும் எழுகிறது. எது எப்படியிருந்தாலும், சிந்திக்க வைக்கும், ஆச்சரியப்பட வைக்கும், ஏன் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வீடியோக்கள் அனைவராலும் ரசித்து பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளங்களில் அடிக்கடி பார்க்கப்படும் வீடியோக்கள் வைரலாகின்றன. பொதுவாகவே, ஆக்கப்பூர்வமான விஷயங்களை விடவும், நேர்மறையான விஷயங்களை விடவும், வித்தியாசமான மற்றும் மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய வீடியோக்கள் அதிகம் விரும்பப்படுகின்றன.

அதிலும் குழந்தைகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் விலங்குகளின் வீடியோக்களை மக்கள் விரும்புகின்றனர். அதிலும் குட்டிக் குழந்தைகள், பெரிய மனிதர்கள் போல வேலை செய்வதும், பொறுப்பாக நடந்துக் கொள்வதும் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | பச்சோந்தி! ஏய் உன்னை திட்டல, நீ ரொம்ப அழகா இருக்கேன்னு பாராட்டறேன்... வீடியோ வைரல்

 

 தற்போது அனைவராலும் விரும்பிப்பார்க்கப்படும் ஒரு குழந்தையின் வீடியோ வைரலாவதற்கு காரணம் ஆடை நழுவுவதைப் பற்றி கவலைப்படாமல் நிதானமாக நடந்து சென்று வேலையை முடித்துவிட்டு, பேண்டை இழுத்து விடுவதுதான். இந்த வீடியோவை பார்த்து மகிழுங்கள்.

இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்து, பகிர்ந்து மகிழந்துள்ளனர். பெரிய மனிதர்களைப் போல ஒரு குழந்தை வேலை செய்வதைப் பார்க்கும்போது, நம்மைப் பார்த்து வளரும் குழந்தைகளை நினைத்தாவது, நாம் நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்ற படிப்பினையை கற்றுக் கொள்ளலாம். 

ஆனால், குழந்தைகளின் குறும்பையும், சுட்டித்தனத்தையும் பாராட்டி மகிழும் நாம், அதிலுள்ள கருத்தை புரிந்துக் கொண்டு நடக்கிறோமா என்றால் அதற்கான பதில் என்னவாக இருக்கும்?

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | நீங்கள் நம்லைன்னாலும் அது தான் நிஜம்... பறவையை தாக்கி கொன்ற மீன்!

மேலும் படிக்க | ஏலேய்! இப்படி தூங்கினா என்னத்துக்கு ஆகும்னு திட்ட முடியாமல் தவிக்கும் அம்மா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News