சென்னை: சமூக ஊடகங்களின் வரவினால், சினிமா மற்றும் தொலைகாட்சியைத் தவிரவும் மக்களுக்கு பல பொழுதுபோக்கு அம்சங்கள் வாழ்க்கையில் வந்துவிட்டன. டிக்டாக், யூடியூப், ஓடிடி தளங்கள், டிவிட்டர் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல்வேறு வழிகளில் நாளை மகிழ்ச்சியாக கழிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இன்ஸ்டாகிராம் ஊடகத்தில், போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடப்பட்டுள் வைரலாகின்றன. அனைவராலும் ரசிக்கப்படும் பதிவுகளை போடும் சமூக ஊடக கணக்குகளை தொடர்பவர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் பலர் பிரபலமாக இருந்தாலும், சென்னையைச் சேர்ந்த 75 வயது ராஜாமணியும் அவருடைய பேரன் தௌஃபிக் என்ற 26 வயது இளைஞரும் சேர்ந்து போடும் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. 



இந்த பாட்டி பேரன் ஜோடியின் கலக்கலான வீடியோ பதிவுகளை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.


மேலும் படிக்க | 80 வயசு தாத்தா, 25 வயசு குமரி; இவங்க செய்யுற செயலா இது


75 வயது பாட்டி, 16 வயது பெண்ணைப் போல குறும்பு செய்வதும், பிரபல வசனங்கள் மற்றும் பாடல்களுக்கு ஏற்றவாறு டான்ஸ் ஆடுவதும், முகத்தில் எக்ஸ்பிரஷன் கொடுப்பது என்று கலக்குகிறார்.



இந்த ஜோடியில் பாட்டிக்கு கற்றுக் கொடுக்கும் பேரன், பாட்டிக்கு இணையாக தூள் பரப்புகிறார். இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்ட இந்த பாட்டியும் பேரனும். வெளியிடும் இன்ஸ்டா ரீல்ஸ்களில் ஆடை அலங்காரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.



அதாவது, உண்மையான வசனம் மற்றும் பாடல்களில் நடிகர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், அலங்காரம், முக அசைவு என சிறப்பாக திட்டமிட்டு செய்யப்படும் இந்த ஜோடி சமூக ஊடகங்களில் பிரபலமானவர்களாக இருக்கின்றனர்.


மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ


பாட்டி மற்றும் பேரனின் வீடியோக்களுக்கு தேவையான ஆடைகள், மேக்கப் அனைத்தையும் கவனித்துக் கொள்வது தௌஃபிக்கின் அம்மா அதாவது, பாட்டிக்கும் பேரனுக்கும் உதவி செய்வது திரைக்கு பின்னால் இருந்து வேலை செய்யும் ராஜாமணி பாட்டியின் மகள் தான்.


இன்ஸ்டாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ராஜாமணி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார் என்பது ஆச்சரியமாக உள்ளது.


பொதுவாக ஆசிரியர்கள், அதிலும் வயதானவர்கள் என்றால் கடுமையாக இருப்பார்கள், நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணத்தை மாற்றும் பாட்டி ராஜாமணி டீச்சர்.


மேலும் படிக்க | பாம்புக்கும் நாய்க்கும் செம சண்டை, ஜெயிச்சது யாரு? அங்தான் ஒரு ட்விஸ்ட்: வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ