80 வயசு தாத்தா, 25 வயசு குமரி; இவங்க செய்யுற செயலா இது: வீடியோ வைரல்

Funny Viral Video: முதியவர் ஒருவர் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதை இந்த வீடியோவில் காணலாம். இந்த காட்சியை பார்த்த மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 12, 2022, 11:19 AM IST
  • திருமணம் தொடர்பான ஒரு வித்தொயாசமான வீடியோ.
  • இந்த வீடியோ மணமக்கள் பற்றிய வீடியோ ஆகும்.
  • இதை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் இதற்கு ரியாக்ட் செய்து வருகின்றனர்.
80 வயசு தாத்தா, 25 வயசு குமரி; இவங்க செய்யுற செயலா இது: வீடியோ வைரல் title=

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் ஒவ்வொரு நாளும் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம். தற்போது சமூக வலைதளங்களில் இது போன்ற ஒரு காட்சி வைரலாக பரவி வருகிறது. அதில் முதியவர் ஒருவர் இளம் பெண்ணை திருமணம் செய்திருப்பதை வீடியோவில் நீங்கள் காணலாம். அதேபோல் அந்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட முதியவருக்கு சந்தோஷம் தாங்க முடியாமல் சிரித்துக்கொண்டே இருப்பதையும் நாம் இந்த வீடியோவில் காணலாம். மேலும் இந்த வீடியோ வெளியானவுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தாத்தா திருமணத்தில் மகிழ்ச்சி
வைரலாகி வரும் இந்த வீடியோவில், திருமணமான பிறகு, தாத்தா தனது மணப்பெண்ணுடன் விருந்தினர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்வதை நீங்கள் காண்பீர்கள். ஆனால் இந்த நேரத்தில் அவர் முகத்தில் மகிழ்ச்சி மீண்டும் மீண்டும் பிரதிபலிக்கிறது. அந்தப் பெண் அமைதியாக உட்கார்ந்திருக்கிறாள், அவள் இந்த திருமணத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்று அவளுடைய சைகையிலிருந்து தெரிகிறது. அதே சமயம் வயதான அந்த தாத்தா மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை நாம் காணலாம். அத்துடன் இந்த ஜோடிகளின் திருமணத்தை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்

தாத்தாவின் இந்த செயல் வீடியோ வைரல்: வீடியோவை இங்கே பாருங்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த நிலையில் தற்போது இந்த வீடியோ மிகவும் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. மேலும் வயதான முதியவருடன் இளம்பெண் திருமணம் செய்துகொண்டதை கண்டு நெட்டிசன்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அத்துடன் நெட்டிசன்கள் தொடர்ந்து வீடியோவில் பலவித கமெண்ட்கள் மற்றும் ரியாக்சன்களை வழங்கி வருகின்றனர். இதுவரை இந்த வீடியோ காட்சி பல மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது, மேலும் பலர் இந்த வீடியோவுக்கு லைக் செய்து வருகின்றனர். அத்துடன் இந்த திருமண வீடியோ  psycho_biihari என்கிற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பார்க்கும்போது இது ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட வீடியோவைப் போல் தெரிகிறது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News