இந்த வயசிலயே இப்படியா? இணையத்தை அதிர வைத்த சூப்பர் டான்சர் பாட்டி வீடியோ வைரல்
Heartwarming Bhangra Dance: பேத்திகளை வாயைப் பிளக்கச் செய்த சீனியர் சிட்டிசன் பெண்களின் பாங்ரா நடனத்தை பார்த்த அனைவரும் வாயடைந்து போகிறார்கள்...
வைரல் வீடியோ: மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி என்றால், அதை சிறப்பாக பிறரிடம் வெளிப்படுத்த தெரியுமா என்றால் அது பலருக்கும் வராத கலை. ஆனால், தனது மகிழ்ச்சியை முழுதுமாக அனுபவித்துக் கொண்டு, அதை பிறருக்கும் உணர்வதும் ஒரு கலை. கலை என்பது எது? இதோ வைரலாகும் ஒரு பாட்டியின் கலை உணர்வும் மகிழ்ச்சியும் அனைவரையும் வியக்க வைக்கிறது. வயதான மூதாட்டி பார்ட்டி ஒன்றில் பாங்க்ரா பாடல் ஒன்றுக்கு துள்ளும் நடன அசைவுகளால் ஸ்டீரியோடைப் டான்ஸ் மூமெண்டுகளை மாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
வயசானால் என்ன? நான் ஜாலியா எப்போதும் போல இருக்கேன் என்று பல முதியவர்கள் வாயால் சொல்வார்கள். இந்த பெண் தனது முதுமையை ஜாலியாக அனுபவிக்கிறார் என்று சொல்லலாம். வயதால், எதுவும் செய்யக்கூடாது என்ற கட்டாயத்தை ஏன் வலிந்து திணித்துக் கொள்ள வேண்டும்? இந்தக் கேள்வியை பல வயதானவர்கள் கேட்டுக் கொள்ள வேண்டிய நேரம் இது.
பொதுக் கருத்துக்களை உடைக்கும் பல விஷயங்கள் இன்றைய உலகில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில், வயதானவர்கள் எந்தவித கவலையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று சொல்வது போலவே, அவர்களுக்கு விருப்பமும் ஆசையும் இருக்காது என்றும் பலர் தாங்களாகவே முடிவு செய்துவிடுகிறார்கள்.
மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ
இதுபோன்ற கருத்துக்களை உடைத்து, தங்கள் வாழ்க்கையை தாங்கள் விருப்பப்படி வாழும் துடிப்பை வெளிப்படுத்தும் நபர்கள் உள்ளனர். இதுபோன்ற ஒரு ஊக்கமளிக்கும் உதாரணம், ஒரு வயதான பெண்மணியின் வடிவத்தில் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் ஒரு நிகழ்வில் நம்பமுடியாத நடனத்திறமையை, உற்சாகமாக வெளிப்படுத்தி, அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட அழகிய பாட்டியின் அற்புதமான நடனத்தை வீடியோவில் கண்டு களியுங்கள்...
வைரல் டான்ஸ் வீடியோ...
வெளியானதிலிருந்து, கிளிப் ஆன்லைன் சமூகத்தை வசீகரித்தது, கருத்துகள் பிரிவில் அன்பையும் பாராட்டையும் குவித்த இந்த வீடியோவில் நடனமாடும் பெண்ணின் ஆற்றலையும் திறமையையும் கண்டு நெட்டிசன்கள் வியப்பில் ஆழ்ந்தனர். பாட்டியின் ஜாலி லூட்டி டான்ஸுக்கு பாராட்டுகள் வந்து குவிகின்றன.
இந்த அற்புதமான தருணத்தைப் படம்பிடித்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @the.bhangra.lover என்ற கணக்கில் பகிரப்பட்டு, 743 ஆயிரம் லைக்குகளைப் பெற்றுள்ளது, இது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"இந்த வீடியோ சூப்பர்... மிகவும் அழகான மனதை வசீகரிக்கும் நடனம்" என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார், மற்றொருவர், "இந்த நடனம் நிச்சயமாக அவரது வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்றால், பார்க்கும் எங்களுக்கும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்து சேர்த்தது!" என்று பாராட்டியுள்ளார்.
கருத்துக்களில் எதிரொலிக்கும் அதிகப்படியான உணர்வு என்ன தெரியுமா? வயது தொடர்பான எண்ணங்களை உடைத்தெறியும் மனோபாவம் தான் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. "இது அழகாக இருக்கிறது.. வயது உங்கள் மகிழ்ச்சியை வரையறுக்க முடியாது என்பது உண்மை தான். யார் பார்த்தால் என்ன, உங்கள் மகிழ்ச்சியை உங்கள் நடனம் வெளிப்படுத்துகிறது" என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | ரூ.20 லட்சம் மாலை.. இணையத்தை தெறிக்கவிட்ட ‘காஸ்ட்லி’ மாப்பிள்ளை, வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ