பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ

Viral Video: ஒரு கட்டத்தில் குழந்தை பாம்பின் தலைப்பகுதியை குத்துவது போல் செய்கிறது. அப்போது நமக்கு உடல் சிலிர்க்கிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 18, 2023, 07:44 AM IST
  • இந்த வீடியொ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் pihu_meena65andneelammeena59524 என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளுக் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பலதரப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

Trending Photos

பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

சமூக ஊடகங்களில் விலங்குகளின் வீடியோகளுக்கென தனி இடம் உள்ளது. இந்த வீடியோக்களை மக்கள் அதிகம் விரும்பி பார்க்கிறார்கள். அதுவும், புலி, சிங்கம், குரங்கு, பாம்பு, நாய், பூனை ஆகியவற்றின் வீடியோகளுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே கூறலாம். இவற்றின் பல வீடியோக்கள் அடிக்கடி வைரல் ஆகின்றன. 

பாம்புகள் மிகவும் ஆபத்தான மற்றும் விஷமுள்ள ஜந்துக்களாக பார்க்கப்படுகின்றன. பொதுவாக பாம்பை கண்டாலே அனைவரும் அந்த இடத்திலிருந்து அச்சத்தில் ஓடிவிடுவதை நாம் பார்த்துள்ளோம். எனினும், பாம்பு பிடிப்பவர்களை தவிர சில வனவிலங்கு ஆர்வலர்கள் போதிய பாதுகாப்புடன் இவற்றின் அருகில் செல்வதுண்டு. சிலர் தங்கள் துணிச்சலை காட்டும் வகையில், பாம்புகளுடன் சில சாகசங்களை செய்வதையும் நாம் சமூக ஊடகங்களில் பார்த்துள்ளோம். ஆனால், இவற்றில் அதிகப்படியான ஆபத்து உள்ளது என்பதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். 

ஆனால் தற்போது ஒரு மிக வித்தியாசமான மற்றும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதில் ஒரு சிறு குழந்தை பாம்புடன் விளையாடுவதை நாம் காண முடிகின்றது. இதை கண்டு நெட்டிசன்கள் அதிக அளவில் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிலர் அந்த குழந்தையை தைரியசாலி என்று பாராட்டினாலும், மற்றவர்கள் குழந்தைக்காக தங்கள் கவலையை தெரிவித்துள்ளதோடு, இந்த வீடியோவை எடுத்தவர்களையும் விமர்சித்துள்ளனர். 

மேலும் படிக்க | Viral Video: ஸைபடர்மேன் அவதாரம் எடுத்து... மிரள வைத்த மியாவ் பூனை...!

பாம்புடன் விளையாடும் பாப்பா

இந்த வீடியோவில் ஒரு சின்னஞ்சிறு குழந்தை பாம்பைப் பிடித்து விளையாடுவதை பார்க்க முடிகின்றது. அந்த குழந்தையின் முகத்தில் அச்சத்திற்கான சுவடையே காண முடியவில்லை. நெளிந்து செல்லும் பாம்பை குழந்தை இழுத்து பிடித்து தன் அருகில் கொண்டு வருகிறது. பாம்பு அதன் மீது ஊர்ந்து செல்லும்போதும் அக்குழந்தை அச்சமில்லாமல் அப்படியே அமர்ந்து இருக்கிறது. ஒரு கட்டத்தில் குழந்தை பாம்பின் தலைப்பகுதியை குத்துவது போல் செய்கிறது. அப்போது நமக்கு உடல் சிலிர்க்கிறது. குழந்தையை பாம்பு எதுவும் செய்து விடக்கூடாது என்ற கவலையே நம்மை வாட்டி வதைக்கிறது. 

சிலிர்க்க வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pihu Meena (@pihu_meena65)

இந்த வீடியொ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் pihu_meena65andneelammeena59524 என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளுக் கிடைத்துள்ளன. இணையவாசிகள் (Netizens) இதற்கு பலதரப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 'குழந்தையின் தைரியம் அசாத்தியமானது' என ஒருவர் எழுதியுள்ளார். 'சிறு குழந்தைகளுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது என்பதற்கு இந்த வீடியோ ஒரு எடுத்துக்காட்டு' என மற்றொரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், பலர் இந்த வீடியோவிற்கு கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர். 'வீடியோ எடுப்பதற்கான இப்படி குழந்தையை ஆபத்தில் சிக்க வைத்த பெற்றோரின் செயல் கண்டிக்கத்தக்கது' என ஒருவர் கூறியுள்ளார். 'இந்த பாம்பு விஷமற்ற பாம்பாக இருக்கலாம். ஆனால், அது குழந்தைக்கு தெரியாது, விஷமுள்ள பாம்பிடமும் குழந்தை இப்படி விளையாடி சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது' என மற்றொரு பயனர் எச்சரித்துள்ளார்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.) 

மேலும் படிக்க | கல்யாண போட்டோஷூட்! இப்பவே லிப்-டு-லிப்பா? மணமக்களின் காதல் லீலை வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News