பொதுவாக நாம் முயல் மற்றும் ஆமை இரண்டையும் தொடர்புபடுத்தி இருக்கும் கதைகளை தான் கேட்டறிந்து இருக்கிறோம்.  ஆனால் இப்பொழுது பலருக்கு ஆமை என்ற பெயர் கேட்ட அடுத்த நொடி அணில் என்று தான் நியாபகம் வரக்கூடும்.  முயல் மற்றும் ஆமை காம்போ போய் இப்போது அணில் மற்றும் ஆமை காம்போ தான் பரவலாக பேசப்பட்டு வருகிறது.  அணில் கூட்டங்களும், ஆமை கூட்டங்களும் மாறி மாறி சண்டைபோட்டு கொண்டிருக்கும் நிலையில் ஒருவர் தனது வீட்டில் ஆமையையும், அணிலையையும் சரிசமமாக வைத்து அன்பாக வளர்த்து வருகிறார்.  அந்த அணிலும், ஆமையும் எந்த சண்டையும் போட்டுக்கொள்ளாமல் அதன் வேலைகளை அது பார்த்துக்கொண்டும், மகிழ்ச்சியாகவும் அந்த வீட்டில் வளர்ந்து வருகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: திட்டம் போட்டு திருடிய மனைவி; வசமாக சிக்க வைத்து சென்ற கணவன்... செம காமெடி 


அணிலும், ஆமையும் ஒரே வீட்டில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, Shannon Apple என்கிற யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவானது சுமார்  7 வருடங்களுக்கு முன்பு பதிவிடப்பட்டது என்றாலும் தற்போது இந்த வீடியோ மீண்டும் வைரலாகி, இணையாவசிகளின் கவனத்தை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.  அந்த வீடியோவில் முதலில் ஒரு அணில் தான் நமக்கு தென்படுகிறது, அது தனது கையில் கூரிய முனைகளுடன் கூடிய சிறிய அளவிலான ஃபோர்க்ஸ் வடிவ ஸ்பூன் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அதிலுள்ள உணவை கொறித்துக்கொண்டு இருக்கின்றது.  இந்த காட்சியே நமது கண்களுக்கு  விருந்தளிக்கும் நிலையில், அதனை தொடர்ந்து சில நிமிடங்கள் கழித்து அந்த வீடியோவில் ஆமை ஒன்று வருகிறது.  அந்த ஆமை அணிலையோ அல்லது அந்த அணில் ஆமையையோ ஒன்றும் செய்யவில்லை, இரண்டும் தனது வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறது.


 



அந்த வீட்டில் ஆமை, அணில் மட்டுமில்லை கூடுதலாக அந்த வீட்டில் ஒரு பூனையும் வளர்க்கப்படுவது அந்த வீடியோவின் மூலம் தெரிய வருகிறது.  அணில் வருவதை கண்டு பூனை அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட, அணில் அதை பொருட்படுத்தாமல் தனது உரிமையாளரிடம் விளையாண்டு கொண்டு இருக்கின்றது.  அதன் பின்னர் அந்த ஆமை அதன் அளவுக்கு ஏற்றார் போல ஒரு ஸ்கேட்டிங் போர்டு எடுத்துக்கொண்டு அதன் மீது ஏறி அமர்ந்துகொண்டு ஸ்கேட்டிங் செய்துகொண்டு இருக்கிறது.  இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, இதுவரை இந்த வீடியோவை இருபத்தி ஐந்தாயிரம் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.


மேலும் படிக்க | ஆட்டம் போட்ட பாம்பு, அசால்டாய் பிடித்து அடைத்த பெண்: ஆச்சரியத்தில் நெட்டிசன்ஸ் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ