தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் துபாயில் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் மரணமடைந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவரை பற்றிய பேச்சுகள் இப்போதும் ரசிகர்களிடம் உள்ளது. மறக்கக்கூடிய பிரபலமாக அவர் என ரசிகர்களும், பிரபலங்களும் புலம்பி தவிக்கின்றனர்.


இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை நடிகை ஸ்ரீதேவி குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில், ஸ்ரீதேவி நடித்த படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது சத்மா. இந்தப் படத்தை எனது குடும்பத்தினருடன் பார்த்த நினைவு இன்றும் உள்ளது.


அவர் நமக்கெல்லாம் முன்னோடி, பலரது வாழ்க்கையிலும் உந்துதலாக இருந்துள்ளார். அவரது இழப்பால் நாங்கள் வருந்துகிறோம் என பதிவு செய்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஹிந்தியில் வெளியான சத்மா தமிழில் கடந்த 1982-ம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை படத்தின் ரீமேக். சத்மா 1983-ம் ஆண்டில் தான் ஹிந்தியில் வெளியானது.


1972-ம் ஆண்டு தமிழகத்தில் பிறந்து வளர்ந்த சுந்தர்பிச்சை தமிழில் வெளியான மூன்றாம் பிறை படத்தை பார்க்கத்தான் வாய்ப்புள்ளது. ஆனால் அவர் சத்மா படத்தை குறிப்பிட்டுள்ளாரே என ரசிகர்கள் டுவிட்டரில் அவரை கேள்வி எழுப்பியுள்ளனர்.