வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாய்கள் மிகவும் விரும்பப்படும் செல்லப்பிராணிகள். நாய்கள் மனிதனின் சிறந்த நண்பர்களாக பார்க்கப்படுகின்றன. வீட்டில் நாய் உள்ளவர்கள் அவற்றையும் வீட்டின் உறுப்பினர்களாகவே பார்க்கிறார்கள். நாய்களும் வீட்டில் உள்ள நபர்களுடன் அளவு கடந்த பாசத்துடன் நடந்துகொள்கின்றன. சமூக ஊடகங்களில் நாய்களின் பல வீடியோக்கள் தினம் தினம் பகிரப்படுகின்றன. இவற்றுக்கு இணையவாசிகளிடம் அதிக வரவேற்பும் கிடைக்கின்றன. 


நாய்கள் அவற்றின் நேர்மையான மற்றும் துணிச்சலான இயல்புக்கு பெயர் பெற்றவை. அவை மனிதர்களுக்கு அற்புதமான தோழர்களாக அமைகின்றன. நாய்களின் நேர்மை அவர்களின் நிபந்தனையற்ற அன்பு மற்றும் விசுவாசத்தில் பிரகாசிக்கிறது. நாய்கள் துணிச்சலான உயிரினங்களாக இருக்கின்றன. அவை அவற்றின் முதலாளி மற்றும் அவர்களது குடும்பத்தைப் பாதுகாக்க எப்போதும் தயாராக இருக்கும். எந்த அச்சுறுத்தலுக்கும் எதிராக அவை நிற்பது அவற்றின் துணிச்சலை நிரூபிக்கிறது. 


திடீரென நிகழும் சில பிரச்சனைகளின் போதும் நாய்கள் தங்கள் சமயோஜித புத்தியால் மனிதர்களுக்கு பல வித நன்மைகளை செய்து விடுகின்றன. பொதுவாகவே நாய்கள் மிகவும் வலுவான ஆபத்து உணர்வைக் கொண்டுள்ளன. சமீபத்தில் வைரல் ஆன ஒரு வீடியோவும் இதற்கு சாட்சியாக அமைகின்றது. 


மேலும் படிக்க | கோபம் வந்தா உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன்... கடுமையாய் தாக்கும் புலி வீடியோ வைரல்


இந்த வீடியோவில் ஒரு சிறுமி சாலையில் சென்றுகொண்டிருப்பதை காண முடிகின்றது. அப்போது அந்த வழியாக ஒரு கார் செல்கிறது. கார் கதவு திறக்கிறது, கார் பின்னோக்கி வருகிறது. அந்த காரில் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது வீடியோவில் தெரியவில்லை என்றாலும், காரில் உள்ளவர்களை கண்டு சிறுமி அஞ்சுவதையும் அங்கிருந்து தப்பிக்க முயல்வதையும் தெளிவாக காண முடிகின்றது. 


சிறுமிக்கு ஏதோ விபரீதம் நடக்கவுள்ளது என நமக்கு புரிகிறது. அப்போது நல்ல வேளையாக அங்கு நாய் ஒன்று வருகிறது. அது அந்த காரில் உள்ளவர்களை பார்த்து குரைக்கத் தொடங்குகிறது. இதை பார்த்து அந்த காரில் வந்தவர்கள் அஞ்சி ஓடுகிறார்கள். நாயின் உதவியால் அந்த சிறுமி காப்பாற்றப்படுகிறார். சிறுமி மட்டுமல்லாமல் நமக்கும் இதை பார்த்து பெரிய அளவில் நிம்மதி கிடைக்கின்றது.


நாயின் அற்புதமான உதவியை இந்த பதிவில் காணலாம்:



வீடியோ இணையத்தில் வைரல் ஆனது


இந்த வீடியோ சமூக ஊடக தள்மான ட்விட்டரில் @cctvidiots என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.  ‘இந்த வீடியோவை பார்த்து என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. நாய்கள் நமது மிகச்சிறந்த நண்பர்கள் என்பது உண்மைதான்’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். ‘மனிதர்களை நம்புவதை விட நாய்களை நம்புவது நல்லது என்பதை இந்த வீடியோ நிரூபிக்கின்றது’ என மற்றொரு பயனர் கூறியுள்ளார்.


மேலும் படிக்க | பாம்பை கைமா பண்ணத் துடிக்கும் முதலை! உன்னை பிரியாணி போடறேன்! சீறும் பாம்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ