Grandmonther Stylish Video Viral : நமது நாட்டில், சமூகத்துடன் போராடி தனக்கென தனி தடம் பதித்தவர்களின் கதைகள் ஏராளமாக உள்ளன. தங்கள் சொந்த காலில் நின்று சாதித்துக்காட்டிய பல உதாரணங்கள் உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், நாம் இன்று தெரிந்துகொள்ளவுள்ள இந்த 77 வயதான மூதாட்டி, தனது பாணியால் மக்களை தன் பக்கம் ஈர்ப்பதில் வெற்றி பெற்றுள்ளார். வாழ்க்கையை முழுவதாக வாழ்வதற்கு வயது ஒரு தடை அல்ல என நிரூபித்துள்ள இந்த மூதாட்டியைப் பற்றி அறிந்த பின்னர், நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள். 



77 வயதிலும் அசத்தலான பாணி
இந்த மூதாட்டியின் வயது வேண்டுமானாலும் 77 ஆக இருக்கலாம், ஆனால் மனதளவில் இவர் இன்னும் இளமைப் பருவத்தில்தான் உள்ளார். அவர் தற்போது சமூக ஊடகங்களில் (Social Media) தனது பாணியால் மக்களை ஈர்த்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் தினமும் ஒரு வீடியோவைப் பகிர்ந்து மகக்ளை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.  



இந்திய உடைகளில் மட்டுமல்ல, மேற்கத்திய உடைகளையும் அணிந்து அசால்டாக பல வீடியோக்களை (Video) அள்ளி வீசுகிறார் இந்த ஹை-டெக் பாட்டி. இது மட்டுமல்லாமல், அவர் தனது கணவருடன் ஸ்டைலான பாணியில் நடனமாடியும் அசத்துகிறார். 


ALSO READ: Watch Viral Video: கண்ணாடி முன்னாடி நடனமாடி வைரல் ஆன முதியவர்


வீடியோ சவாலில் வல்லுனர்களையும் வீழ்த்துகிறார் 
மூதாட்டியின் அபாரமான லுக், அவரது பாணிக்கு இன்னும் அழகு சேர்க்கிறது. இந்த பாட்டி, இன்ஸ்டாகிராமில் (Instagram) 'மிஸ்டர் & மிஸஸ் வர்மா' என்ற பெயரில் ஒரு கணக்கை உருவாக்கியுள்ளார். இந்த கணக்கை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஃபாலோ செய்கின்றனர். மேலும், சமூக ஊடகங்களில் வரும் வீடியோ சவால்களில் இந்த மூதாட்டி தனது கணவருடன் பங்கேற்கவும் செய்கிறார்.


 



மூதாட்டியின் லுக்கிற்கு பல ரசிகர்கள் 
இந்த சூப்பர் பாட்டி பல்வேறு வகையான டிசைனர் ஆடைகளை அணிந்து தனது ஃபாலோயர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதன் காரணமாகத்தான் மக்களது அன்பையும் அவர் அளவுக்கடங்காமல் பெற்று வருகிறார். பாட்டியின் சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு நாளும் அவர் ஏதாவது வித்தியாசமான பாணியைக் காட்டத் தவறுவதில்லை. அவரது இந்த அட்டகாசமான தோற்றமும் வித்தியாசமான லுக்கும் மக்களுக்கு பிடித்திருக்கிறது. இந்த மூதாட்டியும் அவரது கணவரும் சுமார் 61 ஆண்டுகளாக ஒன்றாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: Viral Photo: NASA வெளியிட்ட ஒரியன் நெபுலா புகைப்படம் வைரலானது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR