வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். அதன்படி சிங்கங்கள், புலிகள் மற்றும் சிறுத்தைகள் காட்டில் மிகவும் ஆபத்தான விலங்குகளாக கருதப்படுகின்றன. இவை நம் கண்ணிமைக்கும் நேரத்தில் மற்ற விலங்குகளை இரையாக ஆக்கிக் கொள்கின்றன. ஆனால் காட்டில் சில விலங்குகள் உள்ளன, அவை மிகவும் கனமாக இருக்கும். அதன்படி இங்கு யானை மற்றும் புலி தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகின்றது. அதன்படி இந்த வீடியோவை பார்க்கும் போது காட்டில் யானை அமைதியாக நிற்பதைக் கண்டு புலி அதை வேட்டையாட வருவதை இதில் காணலாம். ஆனால் அடுத்த நொடியில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு இங்கு நடக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யானையை புலி தாக்க முயற்ச்சி
வைரலாகி வரும் இந்த வீடியோவில், யானை அசையாமல் நிற்கும் புலி எப்படி அருகில் சென்றது என்பதை பார்க்கலாம். பின்னர் யானையை தாக்க அந்த புலி திட்டமிடுகிறது. ஆனால் இந்த செயலோ அந்த யானைக்கு பிறகு தான் தெரிய வருகிறது. முழு பலத்துடன், புலி மீது யானை பதிலடி கொடுத்தது. யானையின் பயங்கரமான வடிவத்தைப் பார்த்த புலி நடுங்கத் தொடங்கியது. பின்னர் அந்த புலியை அந்த யானை பின்தொடர்ந்து சென்றது. 


மேலும் படிக்க | பிடிக்க வந்த புலியை கடித்து குதறிய நாய்: கதறிய புலி, வைரல் வீடியோ 


புலி மற்றும் யானை சண்டையை இங்கே பாருங்கள்




பொதுவாக யானைகள் சிங்கம் போன்ற விலங்குகளை விட அதிகம் பலம் கொண்டவை. யானையின் பிடியில் புலி வந்திருந்தால் மிகவும் மோசமாக இருந்திருக்கும் என்று தெரிகிறது. மேலும் காட்டு விலங்குகள் தொடர்பான இந்த வீடியோ @santoshsaagr என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த 47 வினாடி கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்கள் இந்த வீடியோவை மிகவும் விரும்பி பார்த்து வருகின்றனர். இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | ‘நீயா நானா பார்த்துடலாம்’: நாகப்பாம்பை வெச்சி செஞ்ச கீரிப்பிள்ளை, வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ