கீரி முன் ராஜ நாகம்: கிடுகிடுக்க வைக்கும் வைரல் வீடியோ

கீரி தன் இரையை தேடிக் கொண்டிருந்த போது, அங்கு ​​ஒரு பெரிய பாம்பு தன் முன்னால் தோன்றியது. ஃப்ரேமில் இதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது நீங்களே பாருங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 11, 2022, 05:54 PM IST
  • நாக பாம்பு மற்றும் கீரியின் வைரல் வீடியோ
  • ஃப்ரேமில் இதற்குப் பிறகு என்ன நடந்தது
  • சண்டையின் வீடியோவை இங்கே பாருங்கள்

Trending Photos

கீரி முன் ராஜ நாகம்: கிடுகிடுக்க வைக்கும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியொ: இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் என்றாலே உடனே ட்ரெண்டிங் ஆகிவிடும். அதேபோன்று இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் எப்போதும் வைரலாகி வரும். சில நேரத்தில், வித்தியாசமான அல்லது அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும், இணையவாசிகளை கவர்ந்துவிடும்.

அதிலும் பாம்புகள் சம்பந்தப்பட்ட வீடியோக்களும் எந்நேரமும் வைரலாகிவிடும். அதற்கு காரணம், பாம்பை கண்டு அனைவருக்கும் பீதி இருப்பதால், அந்த வீடியோ மேலும் கிளிக்கை தந்துவிடுவதுதான். இப்படித்தான், சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு வீடியோ இங்கு வெகுவாக வைரலாகி வருகின்றது. அதன்படி இந்த வீடியோ ராஜ நாகம் மற்றும் கீரி விலங்கை தொடர்புடையது. 

மேலும் படிக்க | தூங்கிக்கொண்டே தலைகீழாக விழுந்த பூனை! வைரலாகும் வீடியோ! 

அப்படிப்பட்ட அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில், கீரி பெரிய ராஜ நாகப்பாம்பை தாக்கியது, இறுதியில் நடந்ததை பார்த்தால் உங்களால் நம்பவே முடியாது. இந்த வீடியோ இதுவரை மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டு நெட்டிசன்கள் கடுமையாக கமெண்ட் செய்து வருகின்றனர். 

ராஜ நாகப்பாம்பை தாக்கிய கீரி
சிறிய கீரி ஒன்று தனது இரையைத் தேடி அங்கும் இங்கும் அலைவதைக் காணலாம். அப்போது திடீரென ஒரு பெரிய ராஜ நாகம் அந்த கீரியின் முன் விழுந்தது. நீண்ட அகலமான பாம்பைப் பார்த்த கீரி முதலில் பின்வாங்கியது, ஆனால் சில நொடிகளில் அது ஆக்ரோஷமாக மாறியது. பின்னர் அந்த நாகப்பாம்பை தாக்கியது. இங்கு நாகப்பாம்பும் தாக்கும் தோரணையில் வந்தது. சிறிது நேரம் இருவரும் இப்படியே களத்தில் நின்றாலும் கடைசியில் நேருக்கு நேர் வந்த காட்சி அனைவரையும் உலுக்கியது.

பாம்பு-கீரி சண்டையின் வீடியோவை இங்கே பாருங்கள்

சுமார் இரண்டு நிமிடம் கொண்ட இந்த வீடியோ பாம்பு மற்றும் கீரி சண்டையின் நான்கு பிரேம்கள் என்பது தெரிந்ததே. இதில் இருவருக்கும் இடையே நடக்கும் ஆபத்தான சண்டை இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது பிரேம்களில் பார்க்கத் தக்கது. இந்த வீடியோ Ataque De Reptil என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | Viral Video: உருண்டு புரண்டு அடம் பிடிக்கும் குட்டி யானை... நெட்டிசன்கள் மனம் கவர்ந்த வீடியோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News