சன்னி லியோனின் சமீபத்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட்டின் "பேபி டால்" என அழைக்கப்படுபவர் சன்னி லியோன். அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் சமீபகாலமாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறார். 


மேலும் தற்போது சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றினை இணைய தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. இதை தவிர தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் வீரமாதேவி வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார்.


இந்த பிஸி செட்யூலுக்கு மத்தியில் சன்னி லியோன் தனது குடும்பத்தாருடன் நேரங்களை செலவிடவும் மறப்பதில்லை. அந்த வகையில் தற்போது தனது குடும்பத்துடன் மெக்சிக்கோ சென்றுள்ள சன்னி லியோன், தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக தனது சுற்றுலா புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.



அந்த வகையில் இன்று அவர் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!