அமெரிக்காவின் கரோலினா புயலில் போது தனது உயிரை பணயம் வைத்து பூனையை காப்பாற்றிய இளைஞரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு இயற்கைப் பேரிடரின் போதும் யாரோ ஒரு மனிதன் தன்னிடமிருக்கும் எல்லாவற்றையும் இழந்துவிடுகிறான். ஆபத்தில் இருந்து தப்பித்தால் போதும் என வீட்டை விட்டுக் கிளம்புகிற மனிதர்கள் பலர் தான் நேசிக்கிற ஏதோ ஒன்றை கையோடு எடுத்துக் கொண்டு தப்பித்து விடுகிறார்கள். மழை, வெள்ளம், நில நடுக்கம், போன்ற பேரிடர்களில் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளை எப்படியாவது காப்பாற்றிவிடுகிறார்கள்.


புளோரன்ஸ் புயல் பாதிப்பால் அமெரிக்காவின் Wilmington நகரக் கடலோர தெருக்களில் கடல் நீர் புகுந்திருக்கிறது. பல இடங்கள் மின்சாரம் இல்லாமல் மூழ்கியுள்ளது. கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கரோலினா மாகாணத்திலுள்ள கடலோரப் பகுதி மற்றும் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் 17 லட்சம் மக்கள் அவசர அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். 


பலரும் தங்களது செல்லப்பிராணிகளைப் பாதுகாப்பாக எடுத்து செல்கிற படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில் NEW BERN என்கிற நகரில் வீசிய ப்ளோரன்ஸ் புயலில், Robert Simmons என்பவர் வெள்ளத்தில் சிக்கிக் கொள்கிறார். அவரை மீட்புப் படையினர் ஒரு படகில் மீட்டு வருகிறார்கள். அப்போது அவரது தோளில் மழையில் நனைந்த பூனை ஒன்று அமர்ந்து வருகிறது. 


அந்தப் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு  சிறப்பான விஷயம், பூனையின் பெயர் சர்வைவர்...