Heartwarming Viral Video Of Policemen Dancing : சமூக வலைதளங்கள், உலகின் ஒரு கடை கோடியில் இருப்பவரையும்-இன்னொரு கோடியில் இருப்பவரையும் இணைக்கும் வேலையை பார்க்கிறது. இதைத்தாண்டி, மக்களுக்கு நல்ல பொழுது போக்கு அம்சமாகவும் விளங்குகிறது. அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஆப்ஷனில் இருக்கும் வீடியோக்களை பார்த்தால் நேரம் போவதே தெரியாது. சில சமயங்களில் குழந்தைகள் சேட்டை செய்யும் வீடியோக்கள் வரும், மிருகங்கள் க்யூட்டாக சண்டையிட்டுக்கொள்ளும் வீடியோக்கள் வரும், மீம்ஸ், படங்களின் எடிட் என ஆயிரம், ஆயிரம் வீடியோக்கள் கொட்டிக்கிடக்கும். அது போன்ற ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரல் வீடியாே:


அனைத்து ஊர்களிலுமே, காவலர்களுக்கு ஏதேனும் புகார் சென்றால் அவர்கள் அந்த இடத்திற்கு விரைந்து வந்து என்ன பிரச்சனை என்று பார்ப்பர். அது போல, வெளிநாட்டில் ஒரு நகரில் அதிக சத்தம் வருவதாக கூறி காவலர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடைசியில் இங்கு வந்து பார்த்தால், இந்தியர்கள் தங்களின் கடவுளை வழிப்பட்டு பூஜை செய்து கொண்டிருப்பர். 



அங்கு பிரச்சனையை விசாரிக்க வந்த போலீஸாரின் கையில் பூஜை தட்டை கொடுத்து ஆரத்தி எடுக்க வைத்திருக்கின்றனர். பின்னர் கையில் கோல் கொடுத்து ஆட வைத்திருக்கின்றனர். அந்த காவலர்களும் கூட்டத்துடன் கூட்டமாக சேர்ந்து, கைத்தட்டி நடனமாடுகின்றனர். இதை வீடியோவாக எடுத்து யாரோ இணையத்தில் வைரலாக்கியிருக்கின்றனர். இப்போது வரை இந்த வீடியோ பல மில்லியன் வியூஸ்களை கடந்து, 5 லட்சத்திற்கும் மேல் லைக்ஸ்களை தாண்டியிருக்கிறது. 


இணையவாசிகளின் கருத்து..


இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் தங்களின் கருத்துகளை கமெண்ட் செக்‌ஷனில் பகிர்ந்திருக்கின்றனர். ஒரு சிலர், ஏதோ ஒரு இந்திய ஆண்டிதான் இவர்களை இதை செய்ய வைத்திருப்பார் என்று கூற, இன்னும் சிலர், இது தங்களுக்கு மனம் முழுக்க மகிழ்ச்சியை தருவதாக கூறி வருகின்றனர். இன்னும் சிலர், இப்படித்தன் உண்மையாகவே ஒரு இந்திய பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று கூறி வருகின்றனர். 


மேலும் படிக்க | “தம்பி ஓரம் போப்பா..” வழியில் நின்ற நபரை தாேளில் தட்டிய யானை! வைரல் வீடியோ..


மேலும் படிக்க | பூனையை தொட்டிலில் போட்டு தாலாட்டு பாடும் தமிழ் குடும்பம்! வைரல் வீடியோ..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ