Cute Viral Video Of An Elephant : நாம், எதிர்பாரா விதமாக சமூக வலைதளங்களில் பார்க்கும் சில வீடியோக்கள் நம்மை சில சமயங்களில் அதிர்ச்சியுற வைக்கும், பல சமயங்களில் மகிழ வைக்கும், சில சமயங்களில் நெகிழ வைக்கும். அப்படிப்பட்ட வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ:
இயற்கை நமக்கு சில சமயங்களில் கூற வரும் விஷயங்கள், நம்மை வியப்பில் ஆழ்த்திவிடும். அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாக வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு யானை செய்த செயலை நெட்டிசன்கள் பலரும் பார்த்து நெகிழ்ந்து போயிருக்கின்றனர்.
இந்த வீடியோவில் முதலில், யானை வரும் பாதையில் நின்று கொண்டிருக்கிறார் ஒரு நபர். இதை பார்த்தவுடன் அந்த பெரிய உருவம் கொண்ட யானை தள்ளி விட்டுவிட்டோ, அள்ளது தூக்கி எங்கேனும் போட்டு விட்டோ போயிருக்கலாம். ஆனால், அது அப்படி செய்யவில்லை. மனிதர்களை விட மிகவும் மென்மையாக அந்த நபரை அந்த யானை ஹேண்டில் செய்திருக்கிறது.
Elephant gently reminding the human that he is in the way. pic.twitter.com/Ft6P7ICUf8
— Nature is Amazing (@AMAZlNGNATURE) December 14, 2024
அந்த யானை, தன் தோளில் தட்டியவுடன் தவறை புரிந்து கொண்ட அந்த நபர், அதனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு நகர்ந்து செல்கின்றார். அந்த யானையும் அவரை கடந்து செல்கிறார். இப்படி, நெகிழ்ச்சியான மற்றும் க்யூட்டான சம்பவம் நடந்திருக்கும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலர், மனிதர்களான நாம், இது போன்ற மிருகங்களிடம் இருந்து சில நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என கூறி வருகின்றனர். இன்னும் சிலர், மனிதர்கள் எப்படி நாய் மற்றும் பூனைகளை க்யூட்டாக பார்க்கின்றனரோ அதே போல யானைகளும் நம்மை ஒரு க்யூட்டான ஜென்மமாக பார்ப்பதாக கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க | ரயிலுக்கு வெளியில் தலையை நீட்டிய பெண்..அடுத்து நடந்த பயங்கரத்தை நீங்களே பாருங்க..
மேலும் படிக்க | பூனையை தொட்டிலில் போட்டு தாலாட்டு பாடும் தமிழ் குடும்பம்! வைரல் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ