விளையாட்டு வினையானது இப்படித்தான்! இணையத்தில் வைரலாகும் திகில் காட்சி
சாலையில் பந்தை வைத்து விளையாடிய நபரால் வாகன ஓட்டிக்கு நேர்ந்த அதிர்ச்சியான சம்பவம் இணையத்தில் பலரின் கவனங்களை பெற்று வைரலாகி வருகிறது.
நம் முன்னோர்கள் பலவிதமான பழமொழிகளையும் ஒரு காரணத்தோடு தான் சொல்லி வைத்திருக்கிறார்கள், அதில் பலருக்கும் நன்கு பரிட்சயமான ஒரு பழமொழி 'விளையாட்டு வினையாகும்' என்பது. இந்த பழமொழிக்கேற்ப ஒரு சம்பவம் நிகழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சாலையில் ஒருவர் செய்த விளையாட்டு செயல் இருவரின் உடல்களை பதம் பார்த்து இருக்கிறது. இந்த வீடியோவின் மூலம் சாலையில் நாம் எவ்வாறு கவனமுடன் செல்ல வேண்டும், நம்முடைய கவனக்குறைவால் நமக்கு ஆபத்து ஏற்படுவதோடு, நாமல் பிறருக்கும் ஆபத்து நேரும் என்பதை உணர முடிகிறது.
மேலும் படிக்க | சிறப்புத் திறன் கொண்ட நாய்களின் சிறப்பான செயல்கள்! வைரல் வீடியோ
ட்விட்டரில் வைரல் போஸ்ட்ஸ் என்கிற கணக்கு பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவில், இரவு நேரத்தில் ஆல்நடமாட்டம் இல்லாத சாலை ஒன்றில் ஒருவர் கூடைப்பந்தை வைத்து கையால் தட்டிக்கொண்டே சென்று கொண்டு இருக்கின்றார். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக அவர் கையில் வைத்து விளையாடி கொண்டிருந்த பந்து சற்று விலகி சாலையின் நடுவே உருண்டு ஓடி விடுகிறது. இவர் அந்த பந்தை எடுக்க முற்படும்போது அந்த வழியே ஸ்கூட்டி ஒட்டிக்கொண்டு வந்த இருவர் பந்தின் மீது வண்டியை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். கீழே விழுந்த இருவரில் ஒருவர் எழுந்துவிட, மற்றொருவர் எழுவதற்கு முயற்சிப்பதோடு இந்த வீடியோ நிறைவு பெறுகிறது.
சாலையில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சிகரமாகவும், அதே சமயம் நகைச்சுவையை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவானது சில மணி நேரங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும், பல லைக்குகளை பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் அதிர்ச்சியடையும் எமோஜிக்களையும், சிரிப்பு எமோஜிக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | படுக்கையில் மனைவி செய்த வேலை, கடுப்பான கணவன்: வைரல் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR