ஜாம்பியா-ஜிம்பாப்வே எல்லைக்கு இடையே உள்ள உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான விக்டோரியா நீர்வீழ்ச்சியின் விளிம்பில் சாய்ந்த படி தொங்கும் சுற்றுலாப் பயணி ஒருவரின் வீடியோ வெளியாகியுள்ளது. அபாரமான மன தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இதை முயற்சிக்க முடியும். இந்த வீடியோ ட்விட்டரில் Weird and Terrifying என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டது இதுவரை 66.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. வீடியோவில், "380 அடி நீர்வீழ்ச்சிக்கு அருகில் எப்படி தொங்க வேண்டும் (டெவில்ஸ் பூல் என்னும் மிகப் பெரிய விக்டோரியா நீர்வீழ்ச்சி) என்பதை நான் கற்றுக்கொண்டேன்"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:




இந்த வீடியோ இணையத்தில் பலவிதமான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பயனர் இது குறித்து கேள்வி எழுப்பி, "அவளுடைய கணுக்கால்களைச் சுற்றி பாதுகாப்பாக ஏதேனும் கட்டப்பட்டுள்ளதா என்று சொல்லுங்கள்! (கேமரா அவளது கீழ் கால்களைக் காட்டாததால் பாதுகாப்பிற்காக ஏதேனும் இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன்" என்று சந்தேகிக்கிறேன்.


மேலும் படிக்க | அடர்ந்த காட்டில் ஒளிந்திருக்கும் தவளை; 10 நொடியில் கண்டுபிடித்தால் கில்லாடி தான்!


விக்டோரியா நீர்வீழ்ச்சிக்கு பிரிட்டனின் ராணி விக்டோரியாவின் நினைவாக டேவிட் லிவிங்ஸ்டோன் பெயரிட்டார். இவர் ஆப்பிரிக்கக் காட்டுப் பகுதியில் சுற்றி வந்தபோது, 1855-ம் ஆண்டு, நவம்பர் 16ம் நாள் இந்த நீர் வீழ்ச்சியைப் பார்த்த நிலையில், மிக உயரத்திலிருந்து விழும் இந்த நீர் வீழ்ச்சியைக் கண்டதும் ஆச்சரியப்பட்டு, இதைப் போல எங்கும் கண்டதில்லை என்று கூறினார். விக்டோரியா அருவி உலகின் மிக அழகிய அருவிகளுள் ஒன்று. இது ஸாம்பிசி ஆற்றில், சாம்பியா, சிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. 


மேலும் படிக்க | யாரோட ஆட்டம் சூப்பரா இருக்கு... பார்த்து சொல்லுங்க மக்களே! யானையின் க்யூட் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ