காஷ்மீர்: இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீர் முழுவதும் பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அதில் தீவிரவாதி புர்ஹான் வானியின் தந்தை அரசு பள்ளியில் தேசியக் கொடி (National Flag) ஏற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


கடந்த 2011ம் ஆண்டு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் (Hizbul Mujahideen) தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த புர்ஹான் வானி என்ற இளைஞர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.


இவர் ஹிஸ்புல் அமைப்பின் முக்கிய கமாண்டராக இருந்தவர். அதனால் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அங்கு ஐந்து மாதங்களுக்கு மேல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு 90 பேர்க்கு மேல் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். அதன் பிறகு பாதுகாப்பு படையினர் எடுத்த நடவடிக்கை மூலம் அந்த வன்முறை முடிவுக்கு வந்தது.  


ALSO READ | பாகிஸ்தான் கொடியை அகற்றி தேசிய கொடியை பறக்கச் செய்த ராணுவ வீரர்


இந்நிலையில் காஷ்மீரில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்டவைகளில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வலியுறுத்தப்பட்டது. 


இதனைத்தொடர்ந்து நேற்று ஒரு நாள் மட்டும் நடைமுறையிலிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் (Corona Rules) தளர்த்தப்பட்டு முன்னெச்சரிக்கைகளுடன் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.  


இந்நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட புர்ஹான் வானியின் தந்தை டிரால் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ( Government School) தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். அதனால் அவர் நேற்று கொடியேற்றி சுதந்திரதின விழாவை கொண்டாடினர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



ALSO READ | Independence Day: விவசாயிகள் நாட்டின் பெருமையான சின்னமாக மாற வேண்டும் - பிரதமர் மோடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR