பாகிஸ்தான் கொடியை அகற்றி தேசிய கொடியை பறக்கச் செய்த ராணுவ வீரர்

Last Updated : Aug 16, 2016, 05:41 PM IST
பாகிஸ்தான் கொடியை அகற்றி தேசிய கொடியை பறக்கச் செய்த ராணுவ வீரர்  title=

காஷ்மீரில் பார்கான் வானி ஏரியாவில் செல்போன் டவரில் ஏற்றப்பட்டிருந்த பாகிஸ்தான் கொடியை அகற்றிய ராணுவ வீரர் இந்திய தேசிய கொடியை பறக்கச் செய்தார். 

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி பர்கான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. வன்முறையில் இதுவரைக்கும் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

நேற்று நாடு முழுவதும் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. ஜம்மு காஷ்மீரிலும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பர்கான் வானியின் ஏரியாவான திராலில் உயரமான செல்போன் டவரில் ஏற்றப்பட்டு இருந்த பாகிஸ்தான் கொடியை ராணுவ வீரர் அகற்றினார். அவர் உயரமான டவரில் ஏரி இந்திய தேசிய கொடியை பறக்கச் செய்தார். இச்சம்பவம் முழுவதும் வீடியோவாக எடுக்கப்பட்டது. இந்த வீடியோ நேற்று முதல் வைரலாக சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

வீடியோவை பார்க்க:-

Trending News