புது டெல்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கட்டுப்பாடற்ற நிலைமை, ஆக்ஸிஜன் மற்றும் ரெமடெஸ்விர் போன்ற தடுப்பு மருந்துகளின் பற்றாக்குறை, மறுபுறம் கோவிட் சோதனைக்காக மருத்துவமனைகளில் வரிசையில் நிற்கும் பெரும் கூட்டம் ஆகியவற்றிற்கு மத்தியில், மக்கள் சமூக ஊடகங்களில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி, பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில், மத்திய சுகாதார அமைச்சரிடமும் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ட்விட்டரில் #ResignModi மற்றும் #ModiResignOrRepeal என்ற ஹேஷ்டேக்குகளுடன், மத்திய அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சித்து, பல புகைப்படம், வீடியோ, கார்டூன் மற்றும் மீம்ஸ்களை உருவாக்கி பதிவிடுகின்றனர். மக்கள் மட்டுமில்லாமல், பல அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்களும் மத்திய அரசை நோக்கி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளானர்.


சமூக ஊடங்களில், "சிலை மற்றும் மைதானம் அமைப்பதற்கு பதிலாக புதிய மருத்துவமனைகளை கட்டுவதில் மத்திய அரசாங்கம் முதலீடு செய்திருந்தால், இதுபோன்ற மோசமான நிலையை பார்கவேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது" என்று ஒருவர் தெரிவத்துள்ளார். 



ALSO READ | 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி- மத்திய அரசு அறிவிப்பு!


தனது ட்விட்டர் பக்கத்தில் மான் என்ற பயனர், "தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து மட்டும் நமது பிரதமர் கவலைப்படுகிறார், எந்த வகையிலும் மக்கள் பற்றிய கவலை அவருக்கு  அல்ல" எனப் பதிவிட்டுள்ளார்.



கடந்த ஒரு வருடத்தில் நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த எதுவும் செய்யப்படவில்லை என்பதை இந்த படம் நிரூபிக்கிறது. PMCare நிதியில் சேர்ந்த பணத்தை எதற்காக பயன் படுத்தப்பட்டு உள்ளது? இதைப் பற்றி நீங்கள் பதிலளிக்க முடியாவிட்டால், நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும்" என சோம்நாத் ஷ்யாம் என்ற பயனர் தெரிவித்துள்ளார். 



நவ்னீத் என்ற பயனர், "நீங்களே உங்களை நேர்மையாக கேட்டுக்கொள்ளுங்கள்... நீங்கள் விரும்பப்பட்டு, தேர்ந்தெடுத்த ஒரு தலைவராக மோடி இருக்கிறாரா? எனக் கேட்டுள்ளார். 



மத்திய அரசாங்கம் கோயில்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. ராமரா ஜ்ஜியம் என்ற பெயரில் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து கடவுள் ராமரும் அழுகிறார்" என அமன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.


ALSO READ | கொரோனா வைரஸால் இன்னும் மோசமான நிலை ஏற்படும்: நிதின் கட்கரி!


மத்திய அரசை குறிவைத்த எதிர்க்கட்சி தலைவர்கள்:


மறுபுறம், எதிர்க்கட்சித் தலைவர்களும் பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்துள்ளனர். ஆர்.ஜே.டி தலைவர் தேஜ் பிரதாப் யாதவ் (Tej Pratap Yadav), "பிரதமரை ரோமானிய மன்நாடார் "நீரோ"வுடன் ஒப்பிட்டு, ரோம் எரியும் போது நீரோ புல்லாங்குழல் வாசித்து இருந்தார்" எனக் கடுமையாக சாடியுள்ளார். 



"மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மோடி அரசே பொறுப்பு" என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா (Siddaramaiah) பதிவிட்டுள்ளார். சிபிஐ-எம்எல் தலைவர் தீபங்கர் பட்டாச்சார்யாவும் பிரதமரை கடுமையான சாடினார். பிரதமர் தேர்தல் பேரணிகளில் உரையாற்றுவதில் மும்முரமாக இருப்பதாக அவர் கூறினார்.



ALSO READ | கவனம்! கொரோனா ஆட்டம், ஆபத்தில் இந்த 16 மாநிலங்கள்!



 



 



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR