பொதுவாக நாய்கள் என்றாலே நன்றியுள்ள பிராணி என்று தான் அனைவரும் கூறுவார்கள்.  பலருக்கு நாய்கள் (Dogs) தன செல்லப்பிராணியாக இருக்கும், அதனை வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களை போலவே பலரும் வளர்ப்பார்கள்.  இயல்பாகவே நாய்கள் அதை வளர்ப்பவர்களிடம் நல்ல நண்பர்களாகவும், அன்பாகவும் இருக்கும், அதேபோல ஆபத்தில் சிக்கிக்கொள்வோருக்கும் நாய்கள் உதவி செய்யும்.  அதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நிகழ்ந்து, வைரலாகி இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | பந்தாவா பைக் ஓட்டி பக்காவா மாஸ் காட்டிய மணப்பெண்


அந்த வீடியோவில், ஆற்றில் மான் (Deer) குட்டி ஒன்று மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தது.  இதனை கண்ட நாய் உடனே கட்டற்று ஓடும் ஆற்று நீரில் குதித்து வேகமாக தத்தளித்து கொண்டிருந்த மான் குட்டியை தனது வாயால் கவ்வி கொண்டு வேகமாக நீரில் நீந்தி வந்து கரையை அடைந்து, பின்னர் அந்த மானை விடுவித்தது. இந்த காட்சியை நாயின் உரிமையாளர் பதிவு செய்து இருக்கிறார்.  அவர் அந்த மான் குட்டியை கையில் தூக்கி கொண்டு நாயை பாராட்டுகிறார். 


 



இந்த வீடியோ பார்ப்போரின் மனதை வருடும் வகையில் அமைந்து இருக்கிறது.  நாயின் இந்த செயலையும், நாயின் உரிமையாளர் நாயை ஊக்குவித்ததையும் கண்டு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.  மேலும் இந்த இனிமையான காட்சி நெட்டிசன்களின் மனங்களை கவர்ந்துள்ளது, மான் குட்டியைக் காப்பாற்றியதற்காக நாயைப் பாராட்டி ஒருவர் கூறுகையில்,  "இந்த உலகத்திலேயே சிறந்த உயிரினம் என்றால் அது நாய்கள் தான்." என்று கூறியுள்ளார். 


 



இதுகுறித்து மற்றொருவர் ”நம்பமுடியாத உணர்வு, காடுகளை அழிப்பதை நிறுத்திவிட்டு, விலங்குகளின் இடங்களிலேயே அவற்றை தனியாக விட்டுவிடுங்கள், மனிதர்கள் விலங்குகள் மீது கருணை காட்டுங்கள்" என்று கமெண்ட் செய்துள்ளார்.  இந்த வீடியோவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து, இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


ALSO READ | என் தேவதை வந்துட்டா!! தேம்பி அழுத மாப்பிள்ளை, தேற்றிய மணப்பெண், வைரலான வீடியோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR