’மகா நடிகன்’ நாயை ஏமாற்றும் வாத்து - வைரல் வீடியோ
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, நாய் ஒன்றை வாத்து லாவகமாக ஏமாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
உயிருக்கு மிஞ்சியது எதுவும் இல்லை இந்த உலகத்தில். அப்படியான உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மனிதர்களுக்கு கிட்டும் வாய்ப்புகள் விலங்குகளுக்கு இல்லை. ஏனென்றால், அவைகளுக்கு நாள்தோறும் தலைக்குமேல் கத்தி தொங்கிக் கொண்டே இருக்கிறது. வேட்டையாடி உணவைத் தேடிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விலங்குகள் சக விலங்குகளை வேட்டையாடி வேண்டும் என்பது விலங்குகளுக்கு இயற்கை விதிக்கப்பட்டு நியதி.
இந்த நியதியில் அவை தப்பிக்க வாய்ப்பே இல்லை என்றாலும், ஒரு சில நேரங்களில் தங்களின் ஆயுளைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு சில விலங்குகள் கையில் எடுக்கும் சமயோசித்த முடிவுகள் காண்போரை வியக்க வைக்கும். அவற்றில் சில விலங்குகள் அல்லது பறவைகள் எடுக்கும் தந்திரமான முடிவுகள் மனிதர்களையே ஆச்சர்யப்படுத்தும். அப்படியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதாவது, வேட்டையாட காத்திருக்கும் நாயிடம் இருந்து வாத்து சமயோசித்தமாக சிந்தித்து தப்பிக்கிறது.
வைரலாகியிருக்கும் அந்த வீடியோவில் நாயின் காலுக்கு அடியில் படுத்திருக்கும் வாத்து, இறந்தது போல் நடிக்கிறது. நாயும் வாத்து இறந்துவிட்டதாக எண்ணி, அதனை சீண்டாது. சிறிது நேரம் கழித்து நாய் அந்த இடத்தைவிட்டு ஒரு சில அடிகள் நகர்ந்ததும், ஜெட் வேகத்தில் அங்கிருந்து ஓடுகிறது வாத்து. இந்த வீடியோ காண்போரை அசர வைக்கிறது. டிவிட்டரில் மட்டும் இந்த வீடியோ சுமார் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது.
மேலும் படிக்க சின்னபுள்ளதனமால்ல இருக்கு!! மணமேடையில் மணமகன் மணமகள் செய்த காரியம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR