Russia Ukraine War: போருக்கு நடுவில் இந்தியாவுக்கு எஸ்கேப் ஆன இந்தோ-உக்ரைன் ஜோடியின் திரில்லிங் கதை

ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு மத்தியில், இந்தோ-உக்ரைன் தம்பதியினர் எப்படி தப்பினார்கள் என்பது ஆச்சரியமான ஆனால் உண்மையான சம்பவம்... இது சமூக ஊடகங்களில் வைரலாகிறது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 1, 2022, 05:19 PM IST
  • போருக்கு நடுவில் இந்தியாவுக்கு எஸ்கேப் ஆன புதுமணத் தம்பதிகள்
  • இந்தோ-உக்ரைன் ஜோடியின் திரில்லிங் கதை
  • உக்ரைனில் பிப்ரவரி 23ம் தேதி திருமணம் செய்துக் கொண்ட இந்தியர்
Russia Ukraine War: போருக்கு நடுவில் இந்தியாவுக்கு எஸ்கேப் ஆன இந்தோ-உக்ரைன் ஜோடியின் திரில்லிங் கதை title=

Russia Ukraine Conflict: ரஷ்யா-உக்ரைன் குழப்பங்களுக்கு மத்தியில், இந்தோ-உக்ரைன் தம்பதியினர் எப்படி தப்பினார்கள் என்பது ஆச்சரியமான ஆனால் உண்மையான சம்பவம்... இது சமூக ஊடகங்களில் வைரலாகிறது...

உலகத்தையும் உலகப் பொருளாதாரத்தையும் மிகவும் மோசமாக பாதித்த உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில், இந்தோ-உக்ரேனிய ஜோடிக்கு ஒரு அற்புதமான திரில்லிங் அனுபவம் ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாதை சேர்ந்த இளைஞனும் உக்ரைனிய பெண்ணும் உக்ரைனில் திருமணம் செய்து கொண்ட பின்னர், அவர்கள் இந்தியாவுக்கு வந்தனர். அவர்களின் இந்த கிரேட் எஸ்கேப் செய்தி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறது.  

 

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரதீக், பிப்ரவரி 23 அன்று உக்ரைனில் லியுபோவ் என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டார். அதாவது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கு (Russian Invasion) ஒரு நாள் முன்பு திருமணம் செய்துக் கொண்ட இந்த ஜோடி, திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக இந்தியா வந்தது.

சில்கூர் பாலாஜி கோவிலின் தலைமை அர்ச்சகராக உள்ள சி.எஸ்.ரங்கராஜன் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினார். அவர் தம்பதியினரை ஆசீர்வதித்தார் "இந்தப் போர் உலகளவில் இரத்தக்களரியையும் கொந்தளிப்பைக் கொண்டுவந்தது. ஏற்கனவே கொரோனாவால் பேரழிவிற்குள்ளான உலகத்தை மேலும் பாதித்துள்ள போர் இது" என்றுஅ வர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | ‘எங்கள் கண்ணீரைப் பாருங்கள்; ரஷ்யாவின் பொய்யை அல்ல’ : ஐநாவில் உக்ரைன் 

வரவேற்பு நிகழ்ச்சியின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடக மன்றங்களில் பரவி வருகின்றன.  

இதற்கிடையில், 'ஆபரேஷன் கங்கா' பணியின் ஒரு பகுதியாக ஏர் இந்தியா இயக்கும் சிறப்பு விமானங்களில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர இந்திய அரசாங்கம் 'ஆபரேஷன் கங்கா'வைத் தொடங்கியுள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நிலவும் சூழ்நிலை மற்றும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ரஷ்யாவுக்கு தடா

திங்களன்று (பிப்ரவரி 28), உக்ரைன் நெருக்கடி குறித்த உயர்மட்டக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பிரதமர் மோடி, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாகவும். பத்திரமாகவும் இருப்பதை உறுதிசெய்ய முழு அரசு இயந்திரமும் 24 மணி நேரமும் உழைத்து வருவதாகக் கூறினார்.

ஆரம்பகட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டதிலிருந்து இந்தியா 8,000 க்கும் மேற்பட்ட இந்தியரக்ளை வெளியேற்றியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

(பொறுப்புத்துறப்பு: சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் நம்பகத்தன்மையை Zee மீடியா சுயாதீனமாகச் சரிபார்க்கவில்லை)

மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் சிக்கல் மற்றும் போர் தொடர்பான செய்திகளை இங்கே படிக்கலாம்

மேலும் படிக்க | ‘மிருகத்தனமான’ கிளஸ்டர் வெடிபொருட்களை பயன்படுத்துகிறது ரஷ்யா - உக்ரைன் புகார் 

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News