மூதாட்டிக்காக ரோட்டை பிளாக் செய்த இளைஞர் - வைரல் வீடியோ
மூதாட்டிக்காக இளைஞர் ஒருவர் ரோட்டை பிளாக் செய்த வீடியோ இணையவாசிகளை கவர்ந்துள்ளது.
பொது இடத்தில் நடமாடும்போது செய்யும் சின்ன சின்ன நல்ல விஷயங்களும் சமூகப் பணிக்கு இணையாது தான். தன் வாழ்நாளை அர்பணித்து சமூகபணிகளை மட்டுமே செய்யக்கூடியவர்களுக்கு மத்தியில், கிடைக்கும் சிறிய சந்தர்பங்களில் சமூக கடமை ஆற்றுவதும் நல்ல விஷயம் தான். உதாரணமாக, சாலையில் யாரோ விட்டுச் சென்ற பணப்பையை காவல்துறையிடம் ஒப்படைப்பது, பேருந்தில் அல்லது ஆட்டோவில் விட்டுச் சென்ற உடைமைகளை உரியவரிடம் ஒப்படைப்பதும் இதில் அடங்கும்.
மேலும் படிக்க | வம்பிழுத்தவரை வகுந்தெடுத்த நாய் - வைரல் வீடியோ
அந்த வகையில், சாலையில் செல்லும் பார்வை குறைபாடு உடையவர்கள் மற்றும் முதியவர்களால் உடனடியாக சாலையைக் கடக்க முடியாது. அவர்களுக்கு உதவுவதும் பொதுநலம் சார்ந்த ஒன்று தான். இப்போது வைரலாகியிருக்கும் வீடியோவிலும், மூதாட்டி சாலையை கடக்க வேண்டும் என்பதற்காக இளைஞர் ஒருவர் ரோட்டை பிளாக் செய்கிறார். அவரின் இந்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
அந்த வீடியோவில் மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முடியாமல் மெதுவாக நடக்கிறார். பிஸியாக வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் அந்த சாலையில் யாரும் மூதாடிக்காக காத்திருப்பதாக தெரியவில்லை. வேகமாக கடந்து சென்று கொண்டே இருக்கின்றனர். மூதாட்டியும் மெதுவாக சாலையை கடக்க முயற்சிக்கிறார். இதனை காரில் வரும் ஒரு நபரும், இருசக்கர வாகனத்தில் வரும் இளைஞரும் கவனிக்கின்றனர். மூதாட்டியை கவனித்த காரில் இருக்கும் நபர், தன்னுடைய காரை சாலையிலேயே நிறுத்திக் கொள்கிறார்.
மேலும் படிக்க | Viral Video: அப்பா என்ன வெயிலு... நீர்நாய்களின் பனிக்கட்டி குளியல்
ஆனால், மற்ற வாகனங்கள் தொடர்ந்து செல்ல முயற்சிக்கின்றனர். இதனைப் பார்த்த இருச்சக்கர வாகனத்தில் வந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை கார்களுக்கு முன்சென்று நிறுத்தி, மூதாட்டி சாலையை கடக்க உதவுகிறார். அவரின் இந்த சமயோசித்த புத்தியுடன் கூடிய சமூக சிந்தனை, காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.