பூட்டி இருந்த வீட்டில் Bajaj Pulsar வாகனத்தை திருட வந்த திருடன், தனது முயற்சியில் தோல்வியுற்று CFL பல்பினை திருடி சென்ற சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கதேசத்தில் நடைப்பெற்றுள்ள இந்த சம்பவத்தின் CCTV பதிவுகளினை மனோஜ் குஷ்வவாக் என்பவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் திருட வந்த திருடனின் ஒவ்வொரு அசைவுகளையும் காண்பித்துள்ளனர். பூட்டப்பட்டுள்ள வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள Bajaj Pulsar-னை திருட முயலும் இவர் வாகனத்தில் பூட்டினை உடைக்க முயற்சிக்கின்றார். பின்னர் முயற்சியில் தோல்வியடைய வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த CFL பல்பினை திருடி செல்கின்றார்.



வங்கதேசத்தின் எல்லைப் பகுதிகளில் Bajaj Pulsar வாகனங்கள் தொடர்ந்து திருடு போவது வழக்கமாக இருக்கிறது. வங்கதே காவல் நிலையங்களில் பதியப்படும் வழக்குகளில் 50% வழக்குகள் Bajaj Pulsar திருட்டு வழக்குகள் தான் என புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.


Bajaj Pulsar வாகனத்தின் என்ஜின்களில் பயன்படுத்தும் மோட்டார் 12-15 bhp சக்கியினை உறுவாக்கும் திறன் கொண்டது. எனவே Bajaj Pulsar வாகனங்களை திருடி இதன் மோட்டார்களை விவசாய பாசனத்திற்கு பயன்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே வங்கதேசத்தில் Bajaj Pulsar வாகனங்களின் திருட்டு சம்பவம் என்பது இயல்பான ஒன்றாகவே உள்ளது.