பொறுப்பற்ற முறையில் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு ‘return gift’ கொடுக்கும் ஊர் எங்கே இருக்கிறது தெரியுமா? வேறெங்கும் இல்லை, நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் காகிநாடா நகராட்சியில் தான் இந்த முன்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
 
காகிநாடா நகராட்சி ஆணையர் ஸ்வப்னில் தினகர் புண்ட்கர் (Swapnil Dinakar Pundkar) எடுத்துள்ள அதிரடி முடிவு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. பொறுப்பற்ற முறையில் வீதிகளில் குப்பைகளை கொட்டும் குடியிருப்பாளர்களுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்க அவர் ஒரு வித்தியாசமான வழியைக் கண்டறிந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குப்பைகளை வீதிகளில் குப்பை கொட்டும் நபரின் வீட்டிற்கே மீண்டும் குப்பைகளை கொண்டு வந்து சேர்க்கும் பணி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்படியும் திருந்தவில்லையா? பிறகு எச்சரிக்கை விடுக்கப்படும், அதன் பின்னர் அபராதம் விதிக்கப்படலாம்.


இதுதான் காகிநாடா மாநகராட்சியின் புதிய தூய்மைக்கான முயற்சிகளின் துப்புரவு படி.


ஆந்திர மாநிலத்தின் 6 வது பெரிய நகரம் காகிநாடா. இது கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் மாவட்ட தலைமையகமாக செயல்படுகிறது.


துப்புரவுத் தொழிலாளர்கள் கழிவு சேகரித்துக் கொண்டிருந்த போது, ஒரு பெண் சாலையில் குப்பைகளை வீசுவதைப் பார்த்த மாநாகராட்சி கமிஷனர் புண்ட்கர் இந்த முடிவை எடுத்தார்.


துப்புரவு பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த புண்ட்கர், உடனடியாக ஒரு தொழிலாளியிடம் குப்பைகளை எடுத்துக் கொண்டு அந்தப் பெண்ணின் வீட்டில் கொடுத்துவிட்டு வரும்படி சொன்னார். 


தெருவில் போட்ட குப்பை வீடு தேடி வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர் சண்டை போட்டார். அப்போது, சாலைகளில் குப்பைகளைப் போட வேண்டாம் என்று விளக்கமாக எடுத்துச் சொன்னார். குப்பைகளை சேகரிக்க வரும் துப்புரவு பணியாளர்களிடம் குப்பைகளை அவ்வப்போது ஒப்படைத்துவிட்டால் ஏன் குப்பைகளை வெளியே கொட்ட வேண்டும் என்று கமிஷனர் நிதர்சனத்தை எடுத்துரைத்தார்.


"எந்தவொரு நபரும் குப்பைகளை தெருக்களில் கொட்டினால், முதலில் எச்சரிக்கை கொடுக்கப்படும். இரண்டாவது முறை மீண்டும் பிடிபட்டால் அபராதம் விதிக்கப்படும். இது பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி" என்று கமிஷனர் கூறினார்.


காகிநாடாவில் குப்பைகளை சேகரிப்பதற்காக பிரத்தியேகமாக 900 துப்புரவுத் தொழிலாளர்கள் இருப்பதையும் புண்ட்கர் சுட்டிக் காட்டினார்.  


"துப்புரவுப் பணியாளர்கள் காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை குப்பைகளை சேகரிக்கின்றனர். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு RFID  எனப்படும் ரேடியோ அதிர்வெண் மூலம் அடையாளம் காண்பதற்கான குறிச்சொல் ("radio frequency identification) வழங்கப்படுகிறது. இதன் மூலம், துப்புரவுத் தொழிலாளி ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக செல்வது உறுதிப்படுத்தப்படுகிறது. 
எனவே, குப்பையை சேகரிக்க துப்புரவுப் பணியாளர்கள் அனைவரின் வீடுகளுக்கும் செல்வது உறுதி செய்யப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இந்த ஏற்பாடு அருமையாக இருப்பதாக சொல்கின்றனர்" என்று அவர் கூறினார். அடுத்த மூன்று மாதங்களில் ஈரமான மற்றும் உலர்ந்த குப்பைகள் என கழிவுகள் வகைப்படுத்தப்பட்டு சேகரிகப்படும்.


ஸ்மார்ட் நகரங்களுக்கான போட்டியில் காகிநாடா முன்னணியில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். சுகாதாரம் மற்றும் துப்புரவு எங்கள் முன்னுரிமை" என்று அவர் கூறினார்.



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR