Hair-dress: உடையணியாத நிர்வாணக்கோலம் அல்ல, முடி ஆடை அலங்காரம்
ஆடையணியாத பெண்ணின் வீடியோ வைரலாகிறது. ஆனால் இது ஆபாச வீடியோ அல்ல, முடியையே உடையாக உடுத்தி புதுவித ஸ்டைலை ஏற்படுத்தியிருக்கிறார். எனவே இந்த வைரல் வீடியோ நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது
ஆடையணியாத பெண்ணின் வீடியோ வைரலாகிறது. ஆனால் இது ஆபாச வீடியோ அல்ல, முடியையே உடையாக உடுத்தி புதுவித ஸ்டைலை ஏற்படுத்தியிருக்கிறார். எனவே இந்த வைரல் வீடியோ நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது
அந்த வீடியோவில், பெண் ஒரு தொப்பி மற்றும் சன்கிளாஸ்களை மட்டுமே அணிந்திருப்பதைக் காணலாம், பெண்ணின் இன்றைய காலகட்டத்தில் சாதாரண அளவு முடியை வளர்ப்பதே கஷ்டமாக இருக்கும்போது, இவ்வளவு நீண்ட தலைமுடியை வளர்ப்பது எவ்வளவு கடினமானது என்று யோசித்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
அதுமட்டுமல்ல, தனது தீவிர படைப்பாற்றல் மற்றும் திறமையைப் பயன்படுத்தி வீடியோ உருவாக்குபவர்களும் இருக்கிறார்கள். இதுபோன்ற வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இதன் வீடியோ சமீபத்தில் ஹெப்குல் 5 என்ற பக்கத்தில் பகிரப்பட்டது. அந்த வீடியோவில், ஒரு தொப்பி மற்றும் ஒரு ஜோடி சன்கிளாஸ்கள் மட்டுமே அணிந்திருக்கும் பெண், தலைமுடியையே ஆடையாக அணிந்திருப்பதைக் காணலாம். தனது தலைமுடியை முன்னும் பின்னுமாக பிரித்துப் போட்டிருக்கும் அந்த பெண்ணின் முடி அடர்த்தியாக இருக்கிறது. அந்த முடியை இருபுறங்களிலும் பிரித்து ஆடையைப் போலவே அலங்கரித்திருக்கிறார். இது சூப்பர் ஸ்டைலாக இருக்கிறது. ஆடை அணியாமல் இருந்தாலும், ஒரு துளி கூட ஆபாசமாக இல்லை.
தலைமுடியே ஒரு நவநாகரீக ஆடையைப் போல இருக்கிறது. இது முடியாடை என்று சொல்லாவிட்டால், அந்த பெண் ஆடை எதுவும் அணியவில்லை என்று சொல்லாவிட்டால் யாருக்குமே விஷயம் தெரியாது. வைரலாகும் இந்த வீடியோவை பலர் பார்த்து ரசித்துள்ளனர்.
அந்த பெண்ணின் படைப்பாற்றலைப் பாராட்டும் பலரும் ஆச்சரியபப்டுகின்றனர். ஆனால், சிலர் இது உண்மையான தலைமுடியாக இருக்காது. விக்காக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
Also Read | MasterChef படபிடிப்பு தளத்தில் இருந்து படங்களை ஷேர் செய்த தமன்னா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR