நடிகை தமன்னா மாஸ்டர்செஃப் படபிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்களை பகிர்ந்துக் கொண்டார். முதன்முதலாக சமையல் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக தமன்னா தோன்றப்போகிறார். அந்த படபிடிப்புத் தளத்தில் இருந்து புகைப்படங்களை தமன்னா பகிர்ந்து கொண்டுள்ளார்.
அண்மையில் நவம்பர் ஸ்டோரி என்ற வெப்சீரிஸில் நடித்திருந்த நடிகை தமன்னா தனது முதல் ரியாலிட்டி சமையல் நிகழ்ச்சியான MasterChef புகைப்படங்களை பகிர்ந்தார், அது வைரலாகிறது.
நிகழ்ச்சியின் குழு உறுப்பினர்களுடன் மாஸ்டர்செஃப் செட்களில் இருக்கும் தமன்னாவின் ஆடை அலங்காரம் மிகவும் அருமையாக உள்ளது. தனது பின்புற தோற்றத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்துக் கொண்ட அவர், "Coming soon...." என்று எழுதியுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகிறது; ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு லைக் மழை பொழிந்து வருகின்றனர். "உங்களைப் பார்க்க காத்திருக்க முடியாது" என்று ஒருவர் குறிப்பிட்டால், மற்றொருவரோ, "ஒரு கடல் ராணியைப் போல அசாதாரணமான தோற்றம்" என்று எழுதினார். மூன்றாவது ரசிகரோ, "ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் ..." என்று பதிவிட்டிருக்கிறார்.
பிரபலமான தெலுங்கு சேனலுக்கான மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சி தயாராகிறது. பெங்களூரில் உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேகமான செட்டிங்கில் இந்த நிகழ்ச்சி படமாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்ட படப்பிடிப்பு ஜூலையில் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். நீதிபதிகளாக மூன்று சமையல்கலை நிபுணர்கள் பங்கேற்கின்றனர். வார இறுதி நாட்களில் மட்டுமே இந்த நிகழ்ச்சி ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகும்.
பல்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். தமன்னா Andhadhun என்ற இந்தி படத்தின் ரீமேக்கான மேஸ்ட்ரோ (Maestro) என்ற படத்தின் படப்பிடிப்பிலும் மும்முரமாக உள்ளார். எஃப் 3, சீதிமார், குருந்தா சீதகம் மற்றும் தட்ஸ் இஸ் மகாலட்சுமி ஆகியவை தமன்னா நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படங்கள் ஆகும்.
Also Read | LTTE தலைவர் விடுதலைப் புலிகள் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு ’மேதகு’
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR