தனியார் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி என்ற தொடர் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சின்னத்திரை ஆல்யா மானசா. பின்னர் அந்த தொடரின் நாயகன் சஞ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஆல்யாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்மையில் குழந்தையின் முதல் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படத்தை இந்த தம்பதி இணையத்தில் பதிவிட்டு இருந்தனர். குழந்தை பிறந்ததை அடுத்து சில நாட்கள் ஓய்வில் இருந்த ஆலியா (Alya Manasa) , மீண்டும் தற்போது ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார்.


ALSO READ | சென்பாவின் அதிரடி முடிவால் ஷாக் ஆனா ரசிகர்கள்!


தொலைக்காட்சி தொடர்களில் பிஸியாக இருக்கும் சின்னத்திரை ஆலியா மானசா சமூக வலைதளங்களிலும் (Social Media) ஆக்டிவ்வாக இருப்பார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3 மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகிறார்கள். அவ்வப்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்பம், தனது குழந்தையின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார். 


இந்நிலையில் ராஜா ராணி புகழ் ஆலியா மானசா பைக் ஓட்டும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவிக்கு லைக்குகள் குவிந்து வரும் விலையில் , பலரும் அவரின் இந்த முயற்சியை பாராட்டி வருகின்றன. இந்த வீடியோ அனைவராலும் ரசிக்கப்பட்டு, பகிரப்பட்டு வருகிறது.


 



 


இந்த வீடியோவிற்கு கேப்ஷனாக உங்கள் ஆற்றல் முழுவதையும் பழையதை எதித்து போராடுவது அல்ல, புதியதை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள் என்று கூறி வீடியோவை பதிவிட்டு உள்ளார். 


ALSO READ | செம்பாவின் கியூட் குட்டி புகைப்படம்! உள்ளே பார்க்க!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR