வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புலி, சிங்கம் மற்றும் சிறுத்தை ஆகியவை காட்டில் மிகவும் ஆபத்தான விலங்குகளாக கருதப்படுகின்றன. இந்த ஆபத்தான விலங்குகள் தங்கள் இரையின் பின்னால் ஓட துவங்கினால், அந்த இரை அவற்றிடமிருந்து தப்பிப்பது கடினம். ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியான ஒரு வீடியோ சற்று வித்தியாசமாக உள்ளது. இது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இலகுவான இரையாக கருதப்படும் பசு மாட்டை தாக்கிய புலி பற்றிய வீடியோ இதுவாகும். ஆனால் சில வினாடிகளுக்குப் பிறகு மிகவும் ஆச்சரியமான விஷயம் ஒன்று நடந்துள்ளது. 


பசுவிடம் பல்பு வாங்கிய புலி 


தற்போது வெளியாகி வைரல் ஆகியுள்ள வீடியோ-வில், வேட்டையாடும் நோக்கத்துடன் புலி ஒன்று பசுவை துரத்துவதை காண முடிகின்றது. சிறிது நேரம் ஓடிய பின், மாட்டை பிடிக்க அது முற்படும் போது, ​​வேலியில் மோதி கீழே விழுந்தது. அப்போதுதான் ஒரு அதிசயம் நடந்தது. புலி பசுவை பிடிக்க முயன்றபோதுதான், யாரும் எதிர்பாராத ஒன்று நடக்கிறது.


மேலும் படிக்க | பிடிக்க வந்த புலியை கடித்து குதறிய நாய்: கதறிய புலி, வைரல் வீடியோ 


வேலியில் இடித்து பசு எழுந்தவுடன், புலியின் ஆன்மா அதற்குள் போனதுபோல், அதன் போக்கே மாறிவிடுகின்றது. கீழிருந்து எழுந்த பசு, புலியை தாக்கத் துவங்குகிறது. தன் இரை தன்னை சீற்றத்துடன் பார்ப்பதை கண்ட புலி, ஆளை விட்டால் போதும் என ஓடத் தொடங்குகிறது. 


புலி மற்றும் பசுவின் நம்பமுடியாத வீடியோவை இங்கே காணலாம் 



இந்த வேடிக்கையான வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் videolucu.funny என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. மக்கள் இந்த வீடியோவை மிகவும் விரும்பி பார்த்து வருகின்றனர். இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | ‘நீயா நானா பார்த்துடலாம்’: நாகப்பாம்பை வெச்சி செஞ்ச கீரிப்பிள்ளை, வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ