பயிற்சியாளரின் கழுத்தை கடித்த புலி..அப்புறம் என்னாச்சி: வீடியோ வைரல்
Viral Video Today: நபர் ஒருவர் புலிக்கு சர்க்கஸில் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார், அப்போது அந்த புலி பின்னால் இருந்து அவரது கழுத்தைப் பிடித்தது. அடுத்து என்ன நடந்தது என்பதை வீடியோவில் பாருங்கள்.
விலங்குகளுக்கு பயிற்சி அளிக்கும்போது, பயிற்சியாளரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை நீங்கள் பலமுறை பார்த்திருப்பீர்கள். சில சமயங்களில் விலங்குகள் தங்களின் பயிற்சியாளர்களை மோசமாக தாக்கி விடுகின்றனர். இதே போன்ற மற்றொரு காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், சர்க்கஸில் ஒரு புலியின் அருகே பயிற்சியாளர் சென்றவுடன், அந்த புலி அவரை பின்னால் இருந்து தாக்குவதைக் காணலாம். புலி தாக்குதலுக்குப் பிறகு, அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
பயிற்சியாளர் மீது புலி தாக்குதல்
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், பயிற்சியாளர் கூண்டுக்குள் சென்று புலிக்கு ஏதோ கற்றுத் தருவதைக் காணலாம். சிறிது நேரம் கழித்து, சர்க்கஸ் பயிற்சியாளர் மற்றொரு புலி மீது கவனம் செலுத்தும் நேரத்தில், இரண்டாவது புலி பின்னால் இருந்து அவர் மீது பாய்ந்தது. இவான் ஓர்ஃபியஸ் என அடையாளம் காணப்பட்ட 31 வயது பயிற்சியாளர், வலியால் அலறி, புலியின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள போராடும் போது, புலி அவரது கழுத்தில் கடித்தது. மேலும், புலி அதன் பற்களால் அவரது காலைத் துளைத்தது. இதற்கிடையில், பார்வையாளர்கள் பயத்தில் அலறினர். அதிர்ஷ்டவசமாக, ஓர்ஃபி புலியின் பிடியில் இருந்து தப்பினார்
மேலும் படிக்க | Animal Video: ஜாகுவாரின் வேட்டையைப் பார்த்து அதிர்ந்து போய் நிற்பது யார் தெரியுமா?
புலி தாக்குதல் வீடியோவை இங்கே காணுங்கள்:
புலி மற்றும் பயிற்சியாளருடன் தொடர்புடைய இந்த வீடியோ இத்தாலியின் Lecce மாகாணத்தில் கடந்த வியாழன் மாலை ஒரு நேரடி நிகழ்ச்சியின் போது நடைபெற்றது. சர்க்கஸ் பயிற்சியாளரை புலி இழுத்து தரையில் தள்ளி கழுத்தை கடித்த திகிலூட்டும் தருணத்தின் வீடியோ பல சமூக ஊடக தளங்களில் வெளிவந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ @LaSamy65280885 என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த வீடியோவை பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
மேலும் படிக்க | விடாமல் கொத்திய பாம்பு, கடித்துக் குதறிய கீரி: வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ