விடாமல் கொத்திய பாம்பு, கடித்துக் குதறிய கீரி: வீடியோ வைரல்

சாலையில் கீரியும் பாம்பும் சண்டையிடுகின்றன. பாம்பு மீண்டும் மீண்டும் கீரியைக் கொத்தப் பார்க்கிறது. ஆனால் கீரியோ, லாகவமாகப் பாம்பிடமிருந்து நகர்ந்து, அதைத் தாக்கிச் சாய்க்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 4, 2023, 09:20 AM IST
  • நாக பாம்பு மற்றும் கீரியின் வைரல் வீடியோ.
  • சண்டையின் வீடியோவை இங்கே பாருங்கள்.
  • கீரி போட்ட பக்கா பிளான்.
விடாமல் கொத்திய பாம்பு, கடித்துக் குதறிய கீரி: வீடியோ வைரல் title=

வைரல் வீடியொ: இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் என்றாலே உடனே ட்ரெண்டிங் ஆகிவிடும். அதேபோன்று இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் எப்போதும் வைரலாகி வரும். சில நேரத்தில், வித்தியாசமான அல்லது அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும், இணையவாசிகளை கவர்ந்துவிடும். அதில் பாம்புகள் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் எந்நேரமும் வைரலாகிவிடும். அதற்கு காரணம், பாம்பை கண்டு அனைவருக்கும் பீதியடைவது தான். இப்படித்தான், சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு வீடியோ இங்கு வெகுவாக வைரலாகி வருகின்றது. அதன்படி இந்த வீடியோ கீரி மற்றும் அரிய வகை கருப்பு நாகப்பாம்பை தொடர்புடையது.

பாம்பு கடித்தால் கீரி சாகுமா?
பாம்பு சீண்டினால் பெரும்பான்மையான உயிரினங்களுக்கு நஞ்சு ஏறிவிடும் என்றாலும், கீரிப் பிள்ளைக்கு அப்படி ஆகாது. பொதுவாக கீரிப் பிள்ளைகள் பாம்பைவிட வேகமாக நகரும் தன்மையைக் கொண்டிருக்கும், மேலும் பாம்பு கொத்தினால் அதன் நஞ்சு கீரிகளுக்கு பாயாது. காரணம், கீரிப் பிள்ளைகளுக்கு அசிட்டோகோலின் என்னும் எதிர்ப்பு சுரப்பி, அதன் உடலில் நஞ்சின் நச்சுத் தன்மையை ஏறவிடாமல் வைத்திருக்கும்.

மேலும் படிக்க | அம்மாடியோ! இவ்வளோ பெருசா? புல்டோசருடன் சண்டையிடும் மலைப்பாம்பு!

பாம்பு கீரிப் பிள்ளை சண்டை
தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், பாம்புக்கும் கீரிக்கும் இடையே கடுமையான சண்டை நடப்பதை நீங்கள் காணலாம். இதில் பாம்பு மீண்டும் மீண்டும் கீரியைக் கொத்தப் பார்க்கிறது. ஆனால் கீரியோ, லாகவமாகப் பாம்பிடமிருந்து நகர்ந்து, அதைத் தாக்கிச் சாய்க்கிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பதற்கிணங்க சீறிக்கொண்டு இருக்கின்றன.  மீண்டும் கீரி பாம்பை கடித்துவிட்டு சந்தையில் வெற்றி பெற்றுவிடுகிறது.

பாம்பு மற்றும் கீரியின் சண்டை வீடியோவை இங்கே காணுங்கள்

சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ தற்போது இணயத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ beautiful_new_pixandwild_animal_pix என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.

 மேலும் படிக்க | ’சார்...ஐ எம் பாவம்..’ ஆட்டம் ஆடி மன்னிப்பு கேட்கும் நாய்; வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News