மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மோடி ட்வீட்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சுமித்ரா மகாஜன் அனுமதி அளித்துள்ளார். இதனையடுத்து இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் வரும் இன்று (ஜூலை 20) நடைபெறுகிறது. 


பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் முத்தலாக உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற அரசு ஆர்வம் காட்டிவருகிறது. இதற்கிடையில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முனைப்பு காட்டி வந்தது.


இந்நிலையில் இந்த தீர்மானம் மீதான விவாதம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் எனவும், முடிவில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. 7 மணி நேரம் நடக்க உள்ள இந்த விவாதத்தில் ஆளும் பா.ஜ.க அரசு பேச 3.5 மணி நேரமும் காங்கிரசுக்கு 38 நமிடங்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு முதலில் கோரிக்கை வைத்த தெலுங்கு தேசம் கட்சிக்கு 13 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் பின்னர் மல்லிகார்ஜுனாவும் பேசவுள்ளனர். 


இதைதொடர்ந்து, நம்பிக்கையில்லா தீர்மானம் தொடங்கயுள்ள நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று முக்கியமான நாள் என்றும் இன்று ஆக்கப்பூர்வமாகவும், விரிவாகவும், அமளியின்றி விவாதம் நடைபெறும் என நம்புகிறேன் எனவுன் தெரிவித்துள்ளார். 


மேலும், அவர் நாடே நம்மை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.