Viral Video: ஓலிம்பிக் 2020 தற்போது டோக்கியோவில் நடைபெற்று வரும் நிலையில் ஜிம்னாஸ்டிக் போட்டியை டிவியில் பார்த்து அதனுடன் விளையாடி குறும்பு செய்யும் பூனையின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது நடந்து கொண்டிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி (Tokyo Olympics) அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. விளையாட்டு வீரர்களின் சாகசங்கள், வெற்றி போன்றவற்றால் பார்வையாளர்கள் மிகவும் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் பார்வையாளர்கள் மட்டுமில்லை, விலங்குகளும் ஒலிம்பிக் போட்டியால் ஈர்க்கப்பட்டு உள்ளன என்று தான் கூறவேண்டும். ஏனென்றால்,  டோக்கியோவில் நடைபெற்றிருந்த ஜிம்னாஸ்ட் போட்டி ஒன்றில் பூனை எவ்வாறு தன்னை மறந்து ஈர்க்கப்பட்டது என்பதை ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோ காட்டுகிறது.


 



ஒரு ஜிம்னாஸ்ட் போட்டி நிகழ்ச்சியை தொலைக்காட்சித் திரையில் பார்க்கும் ஒரு பூனை, அந்த வீராங்கனையின் பாதங்களைத் தொடுவதை வீடியோ காட்சிகள் மூலம் காணலாம். ஜிம்னாஸ்ட்களின் சாமர்த்தியமான நெகிழ்வான அசைவுகளுக்கு ஏற்ப பூனையும் யதார்த்தத்துடன் அதனுடன் போட்டி போட்டது. 


இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டஇந்த வீடியோவில் "2024 ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் கலந்துக்கொள்ளும் பூனை" என வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.


ALSO READ | Donkey Sawari: மழை வேண்டி கழுதை மீது உட்கார்ந்து ஊரைச்சுற்றி வந்த நாட்டாமை


ALSO READ | Viral Video: தாலி கட்டுவதற்கு முன்னால் மணமகனுக்கு நடந்த விபரீதம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR