மிருககாட்சி சாலைக்கு சுற்றுலா சென்றால், அடக்கமாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால், அடங்கிவிட வேண்டியிருக்கும். இந்த நிதர்சனத்தைப் புரிந்துக் கொண்டால் பிரச்சனை இல்லை.  ஆனால், பலருக்கும் பயம் இருந்தாலும், சாகசம் செய்வதாக நினைத்துக் கொண்டு, ஏதாவது செய்து மாட்டிக் கொள்ளும் குறும்பர்களுக்குஇந்த வீடியோ ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிருகக்காட்சி சாலைக்கு சென்று வாகனத்தில் சுற்றிப்பார்க்க ஒரு குழுவினர் சென்றனர். அப்போது, படுத்திருக்கும் சிங்கத்துக்கு அருகில் செல்லும் வாகனத்தில் உள்ள ஒருவர், மெதுவாக ஜன்னலைத் திறந்து சிங்கத்தை தடவிக் கொடுக்கிறார்.
சிங்கம் சீறி எழுந்து பிளிறத் தொடங்கியதும் பட்டென்று ஜன்னலை மூடி பாதுகாப்பாகிறார் சீண்டிய சுற்றுலாப் பயணி. அதுமட்டுமல்ல, அவர் அப்படியே அந்த சம்பவத்தை வீடியோவும் எடுக்கிறார்.


இதை வாகனத்தில் இருக்கும் மற்றொருவர் வீடியோவாக எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சிலிர்க்கும் சிங்க வீடியோவாக இணையத்தில் வைரலாகிறது. இதுவரை 11 லட்சம் முறை இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள்,சிங்கத்தை செல்லமாக கொஞ்சிய சுற்றுலாப் பயணியை கழுவி ஊற்றுகிறார்கள். 



இந்த சம்பவம் தான்சானியாவில் உள்ள செரெங்கேட்டி தேசிய பூங்காவில் நடைபெற்றுள்ளது.  சம்பவத்தின் வீடியோ 23 வினாடிகள் கொண்டது.  கடந்த ஆண்டு யூடியூப்பில் வெளியான இந்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாகிறது. 


READ ALSO | முத்தம் இனிக்குமா? கசக்குமா? பாம்பை முத்தமிடும் பெண்ணிடம் கேட்கலாமா?


சஃபாரி வீடியோவில் சுற்றுலாப் பயணி ஒருவர், வாகனத்தின் திறந்த ஜன்னல் வழியாக சிங்கத்தை செல்லமாக கொஞ்சுவதும் தெரிகிறது. சிங்கம் கர்ஜனை செய்யும்போது, ​​வாகனத்திற்குள் இருக்கும் சுற்றுலாப் பயணிகள் பீதியில் அலறுகின்றனர்.  


இந்த பதிவுக்கு பலரும் கருத்துக்களை எதிர் பதிவிட்டுள்ளனர். “செரெங்கேட்டியில் ஒரு சுற்றுலாப் பயணி ஆண் சிங்கத்தைத் தொட்டார். இது மிகவும் முட்டாள்தனமான செயல், உங்கள் உயிருக்கு ஏன் நீங்களே ஆபத்தை தேடுகிறீர்கள். உங்கள் செயலால், சுற்றுலாப் பயணிகள் தேசிய பூங்காவிற்கு செல்வதற்கு தடைசெய்யப்படலாம்” என்று ஒருவர் கருத்திட்டுள்ளார்.


"உண்மையில் சிங்கம் மிகவும் கண்ணியமாக இருந்தது" என்று ஒருவர் கிண்டலாகப் பதிலளித்தால், மற்றொருவரோ, "சுற்றுலாப் பயணிகளை சுற்றுலா வழிகாட்டிகள் கட்டுப்படுத்டி வைக்கவேண்டும். இதுபோன்ற துடுக்குத்தனமான செயல்கள் எதிர்பாராத தவறான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று பதிவிட்டுள்ளார்.


"சிங்கம் பலமாக இருக்கின்றன... சிங்கம் வாகனத்திற்குள் செல்ல விரும்பினால் அந்த ஜன்னலாலும் அதை தடுக்க முடியாது" என்று ஒருவர் எழுதியுள்ளார்.


Also Read | கணவனையும் கள்ளக்காதலியையும் துவம்சம் செய்த மனைவி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR