இந்திய வனத்துறை அதிகாரியான சுசாந்தா நந்தா, விலங்குகள் தொடர்பான பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இப்போது அவர் பதிவிட்டிருக்கும் வீடியோவில், சுற்றுலாப் பயணிகள் சிலர் காட்டுக் கழுதைகளை காரில் துரத்தியடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மோசமான இந்த நடவடிக்கைக்கு அவர் மட்டுமல்லாது மற்ற நெட்சன்களும் சுற்றுலாப் பயணிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் லடாக்கில் நடைபெற்றுள்ளது. அங்கிருக்கும் காட்டுக் கழுதையை தான் சுற்றுலாப் பயணிகள் காரில் இருந்தவாறே வேகமாக துரத்தியடித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: குசும்பு பிடிச்ச குட்டி யானைப்பா இது... ஒரு இடத்துல நிக்க மாட்டியா...!!


இந்த வீடியோ இதுவரை ஒரு லட்சத்து பத்தாயிரம் பேருக்கு மேல் சென்றடைந்துள்ளது. இதனை பார்க்கும் பல சமூக ஊடக பயனர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதோடு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். "இதுபோன்ற சுற்றுலாப் பயணிகளுக்கு வாழ்நாள் முழுவதும் தடை விதிக்கப்பட வேண்டும்," ஒரு பயனர் கோரினார். மற்றொருவர், "இதுபோன்ற பயணங்களை ஏற்பாடு செய்யும் டிராவல் ஆபரேட்டர்கள் மீது எந்தவித இரக்கமும் இன்றி வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் மற்ற டிராவல் ஆபரேட்டர்கள் இதுபோன்ற செயல்களைச் செய்யத் துணிய மாட்டார்கள்," என்றார். 


பலர், ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தல் மற்றும் வனவிலங்கு இடங்களுக்குச் செல்வதைத் தடை செய்தல் உள்ளிட்ட விஷயங்கள் செய்யலாம் என வாதிட்டனர். திபெத்திய காட்டு கழுதை, கியாங் என்றும் அழைக்கப்படுகிறது, இது அனைத்து ஆப்பிரிக்க மற்றும் ஆசிய காட்டு கழுதைகளை விடவும் மிகப்பெரியது. இது லடாக்கின் சாங்தாங் பகுதிக்குள் மட்டுமே இருக்கும், அழிந்து வரும் இனமாகும். இந்திய விலங்கியல் ஆய்வகத்தால் வெளியிடப்பட்ட 'இந்திய விலங்குகள் பற்றிய சிவப்பு தரவு புத்தகத்தில்' இந்த விலங்கு பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972 மற்றும் CITES பின் இணைப்பு II இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது. 



மேலும் படிக்க | பீகாரில் துப்பிய குட்காவை நக்கி சுத்தம் செய்யுமாறு அடித்த ஜவான் - இணையத்தில் வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ